Newskadai.com
தமிழ்நாடு

அரிசி, பருப்பு வாங்க எவ்ளோ நேரம் நிக்கிறது..? சாலை மறியலில் இறங்கிய பொது மக்கள்…

delay in fingerprint in ration shop
Share this:

வேளாங்கண்ணியில் உள்ள திருவாரூர் கூட்டுறவு மொத்த பண்டக சாலையில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு பொருட்கள் வாங்க கால தாமதாகிறது என்று அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் கைரேகை பதிவு செய்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

delay in fingerprint in ration shop

இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது சார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க உறுதியளித்தனர். இதனையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

delay in fingerprint in ration shop

இதேபோல் நாகப்பட்டினம் காடம்பாடியில் கூட்டுறவு சங்க நியாயவிலை கடையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கடையில் ஏற்பட்டுள்ள நெட்ஒர்க் பிரச்சனையால் பொருட்கள் வாங்க பலமுறை இங்கு வரவேண்டிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், எங்களது ஸ்மார்ட் கார்டுடன் கடைக்கு வந்தால் பொருட்களை ஒரே முறையில் வாங்கிச் சென்றிடுவோம்.

delay in fingerprint in ration shop

ஆனால் இப்பொழுது ரேஷன் பொருட்கள் வாங்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. பல நேரங்களில் நெட்ஒர்க் பிரச்சினையால் கைரேகை பதிவு செய்யும் எந்திரம் செயல்படவில்லை. இதனால் பில் போட முடியவில்லை என்று விற்பனையாளர் கூறி வருகின்றனர். இதனால் பொருட்கள் வாங்கமுடியாமல் திரும்பி போகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நியாயவிலை கடையில் இணைய சேவை பிரச்சனைகளை உடனே சரிசெய்து அனைவருக்கும் பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்காக ஒன்றிணைந்த போலீசார்… சம்பளத்தில் இருந்து ரூ.86 லட்சம் நிதியுதவி…!

THAVAMANI NATARAJAN

நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு… ஜலகண்டாபுரம் பேரூராட்சியை முடக்க ஆட்சியர் உத்தரவு…!

AMARA

ரூ.250 கோடி ப்பே…. இந்த தண்ணி தொட்டிக்கு செலவு 250 கோடி… வாய் பிளக்கும் மக்கள்…!

MANIMARAN M

+1,+2 மாணவர்களுக்கு ஒரிஜினல் மார்க் சீட்… அரசின் அதிரடி அறிவிப்பு…!

THAVAMANI NATARAJAN

பிரபல ரவுடி என்கவுண்டர்… பரபரப்பில் சென்னை…

MANIMARAN M

இந்திய ரேஷன் கடைகளில் முதன்முறையாக… தமிழகத்தில் வருகிறது… மொபைல் ரேஷன் ஷாப்…

MANIMARAN M