Newskadai.com
தமிழ்நாடு

அதிவேகமாக பைக்கில் வந்த 17 வயது சிறுவனால் தூக்கி வீசப்பட்ட சிறுமிகள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

bike accident dharmapuri
Share this:

தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களில் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து கொண்ட வருகிறது. அந்த வகையில் தருமபுரி மாவட்டம் அதியாமான் கோட்டையில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பாளையாத்தனூர் மற்றும் தோக்கம்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுமிகள் இருவர் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் சேலம்-ஒசூர் பைபாஸ் சாலையில் மாவட்ட ஆட்சியர் விடுதி அருகே சாலையை கடக்க முயன்றுள்ளனர்.

girls involved in the accidentமேலும் படிக்க: http://அனகோண்டாவுக்கும், முதலைக்கும் சண்டை..!! கடைசியில் யார் ஜெயிச்சது..!? வைரல் வீடியோ..!!

அந்த சமயத்தில் அதிவேகமாக வந்துகொண்டிருந்த மற்றொரு வாகனம் சிறுமிகளின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் சிக்கிய சிறுவர், சிறுமிகளை பொதுமக்கள் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பலத்த காயம் அடைந்த இரண்டு சிறுமிகளையும் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவன் நார்த்தம்பட்டியை சேர்ந்த முரளிதரன் வயது 17 என்பது தெரியவந்தது. 18 வயதிற்கு உட்பட்டவர்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது என்ற விதி உள்ள நிலையில், விபத்தில் சிக்கிய இரண்டு இருசக்கர வாகனங்களுமே விதியை மீறி இயக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த பரபரப்பான விபத்தின் சிசிடிவி வீடியோ…


Share this:

Related posts

கோவில் உண்டியல் பத்தாதுன்னு… ஏடிஎம்-ல் கை வைத்த வாலிபர் கைது.!!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் அதிர்ச்சி… ஒரே நாளில் கொரோனாவுக்கு 119 பேர் பலி…!!

AMARA

ஆசிரியர் தகுதி தேர்வில் திடீர் திருப்பம் .. அன்புமணிக்கு அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி பதில்..!!

THAVAMANI NATARAJAN

மாணவன் வாழ்க்கையில் விளையாடிய “பப்ஜி”… செல்போன் வாங்கித் தராததால் தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடியார்… விநாயக சதூர்த்தி ஊர்வலங்களுக்கு தடை…

MANIMARAN M

கறி விருந்து: ஜலகையில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி?

NEWSKADAI