Newskadai.com
இந்தியா

கூட்டு பாலியலுக்கு உள்ளாக்கப்பட்டவர் சிறையில் அடைப்பு. சமூக ஆர்வலர்கள் கண்டனம்.

Share this:

பீகாரில் அராரியா மகளிர் காவல் நிலையத்தில் ஜூலை 9ஆம் தேதி, 22 வயதான பெண் ஒருவர் தனக்கு 6 ஆம் தேதி நடந்த கூட்டு பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளித்தார். அதில் தனக்கு இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுதருவதாகக் கூறி அப்பெண்ணிற்கு தெரிந்த இளைஞர் ஒருவர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த ஐந்துநபர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், உடன் வந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார் என்றும் அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார். அப்புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் 376(D) -ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இச்சம்பவம் நடந்த பின் அப்பெண் தன் வீட்டிற்கு செல்ல விருப்பமின்றி இருந்ததால், சம்பவ இடத்தில் அப்பெண்ணுக்கு உதவிய ஜன் ஜக்ரன் சக்தி ஜகந்தன் (JJSS) சமூக சேவை அமைப்பினர் சிலருடன் சென்று தங்கிக் கொண்டார். அப்பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஜூலை 10 ஆம் தேதி குற்றவியல் நடுவர் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. ஜூலை 10 ஆம் தேதி தனக்கு உதவிய ஜன் ஜக்ரன் சக்தி ஜகந்தன் அமைப்பை சேர்ந்த தன்மயி நிவேதிதா மற்றும் கல்யானி படோலா ஆகிய இருவருடன் வாக்குமூலம் அளிக்க அராரியா மாவட்ட நீதிமன்றம் வந்தனர்.

குற்றவியல் நடுவரிடம் கூட்டு பாலியலுக்குள்ளாக்கபட்ட அந்த பெண் வாக்குமூலம் அளித்து நான்கு மணி நேரம் காத்திருந்த பின், குற்றவியல் நடுவரிடம் வாக்குமூலத்தில் கையெழுத்திட அழைத்த பொழுது அங்கு நடக்கும் நடவடிக்கைகள் தனக்கு புரியவில்லை என்றும் அதனால் துணையாக வந்த இரு பெண்களையும் தன்னிடம் அழைத்து வரும்படியும் கேட்டுள்ளார். அவ்விரு பெண்களும் அப்பெண்ணிடத்தில் வந்தபொழுது அவர்களை அப்பெண் கடிந்து ஆவேசமாக “என்னருகில் இல்லாமல் எங்கு சென்றீர்கள், எனக்கு நீதிபதியின் அறிக்கையை படித்துக் காட்டுங்கள்” என்று பதட்டத்துடன் சப்தமிட்டு கத்தியுள்ளார். இதில் கோபமடைந்த குற்றவியல் நடுவர் அங்கிருந்த காவல் அதிகாரியிடம், இவர்கள் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து மூவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அராரியாவிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் சமஸ்டிபூரில் உள்ள தல்சிங்சரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு குறித்த தகவல் வெளியானதும், பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட 370-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு இச்சம்பவம் குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான அந்த பெண் மனதளவில் பலவீனமாக இருந்ததாலும், அவருடன் துணையாக வந்தவர்கள் விலகி இருந்ததாலும் பதட்டமடைந்து அப்படி நடந்துக் கொண்டிருக்கிறார் என்றும், அவரை சிறையில் அடைத்திருப்பது அவரின் உடல் நிலையை மேலும் பாதிப்படையச் செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் துணிச்சலுடன் புகார் அளித்த அந்த பெண்ணின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, கூட்டு பாலியல் வழக்கு கிடப்பில் போடப்பட்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கே முக்கியமானதாக பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட மூவருக்கும் பிணைக் கேட்டு JJSS மனு அளித்துள்ளனர்.


Share this:

Related posts

கொரோனா பீதி: கைவிடப்பட்ட முதியவர் சடலம்… கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை… இறுதியில் அரங்கேறிய அவலம்… வீடியோ…!!

MANIMARAN M

நாய்கள் பராமரிக்க ஆட்கள்தேவை கல்வித்தகுதி : பி.ஏ. பிஎஸ்சி. பிடெக்

NEWSKADAI

கோமாவில் பிரணாப் முகர்ஜி… எந்த முன்னேற்றமும் இல்லை என கைவிரித்த ராணுவ மருத்துவமனை…!!

THAVAMANI NATARAJAN

12 மொழிகளில் தேசிய பொது தேர்வு… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய நபர்… புதரில் சடலமாக மீட்பு….!!

NEWSKADAI

குட் நியூஸ் : ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி…

MANIMARAN M