Newskadai.com
சினிமா

சுஷாந்த் வழக்கில் திடீர் திருப்பம்… பாலிவுட்டை பதற்றத்தில் ஆழ்த்திய பீகார் முதல்வரின் அதிரடி உத்தரவு…!!

Sushant
Share this:

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் சுஷாந்த் சிங் ராஜ்புட், ஒரே படத்தில் ஓஹோ என கிடைத்த பிரபலத்தால் பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்தார். அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த அவர், மன அழுத்தம் காரணமாக  ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தியாவையே உலுக்கிய இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: http://சுஷாந்த் தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்… கைதாகிறாரா காதலி ரியா சக்ரபர்த்தி??

முதலில் பாலிட்டின் வாரிசு அரசியல் தான் சுஷாந்த் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டது. இதனையடுத்து பாலிவுட் பிரபலங்களான கரண் ஜோஹர், ஆலியா பட், சஞ்சய் லீலா பாஞ்சாலி, சல்மான் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக இதுவரை 41 பேருக்கு மேல் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், அதிரடி திருப்பமாக அவரது காதலியான ரியா சக்ரபர்த்தி மீது சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் சுஷாந்தின் மரணத்திற்கு ரியா தான் காரணம் என்றும், அவருடைய வங்கி கணக்கில் இருந்து 150 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகவும் அடுக்கடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ரியா, பாட்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை மும்பையில் விசாரிக்கும் படி கோரியுள்ளார். அந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், மும்பை வந்துள்ள பீகார் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

 

இதுகுறித்து விசாரணை அதிகாரியான வினய் திவாரி பேட்டி ஒன்றில், சுஷாந்த் மரணம் தொடர்பான ஆவணங்களை மும்பை போலீசாரிடம் கேட்டிருப்பதாகவும், ஆனால் அவர்கள் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டியுள்ளார். இதுவரை ரியா சக்ரபர்த்தியை கைது செய்யும் எண்ணமில்லை என கூறியுள்ள அவர், தேவைப்பட்டால் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

 

மேலும் படிக்க: http://அயோத்தி பூமி பூஜை…. நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி…!!

சுஷாந்த் வழக்கில் மறைந்துள்ள மர்மங்கள் விலக வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை மட்டுமே சரியான தீர்வு என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தனது மகனின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், சுஷாந்த் வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளார். இந்த அறிவிப்பு சுஷாந்த் காதலியை மட்டுமின்றி பல பாலிவுட் பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Share this:

Related posts

மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த குரல் மீண்டு வந்தது…. எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான பரபரப்பு அறிக்கை…!!

THAVAMANI NATARAJAN

விரைவில் தியேட்டர்கள் திறப்பு?… அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன நல்ல செய்தி…!!

MANIMARAN M

“அப்பா உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”… எஸ்.பி.பி.சரண் வேண்டுகோள்…!!

AMARA

சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிராக புகார்… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

THAVAMANI NATARAJAN

இசை ஞானிக்கே இப்படியொரு பரிதாப நிலையா?…. இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது புகார்…!!

NEWSKADAI

“சீக்கிரமா எழுந்து வா”… பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்காக இளையராஜா வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!

AMARA