Newskadai.com
தமிழ்நாடு

நேரடி கண்காணிப்பில் நீர்மட்டம்… பவானி சாகர் அணை பகுதியில் அதிரடி மாற்றம்…!!

Dam
Share this:

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வண்ணம் உள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரிய அணையாக பவானி சாகர் அணை விளங்குகிறது. இது 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளவும் கொண்டுள்ள இந்த அணையில் இருந்து ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் அளிக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டத்தை கண்காணிப்பதற்காக அணையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் அளவீடு அறையில் உள்ள அளவீட்டு கருவியின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கணக்கெடுக்கப்பட்டு அதன் விபரங்களை தொலைபேசி மூலம் பவானிசாகர் செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு தெரிவித்து கணக்கிடுவது நடைமுறையில் இருந்தது.

Bhavani sekar Camera

தற்போது அதற்கு மாறாக உயரதிகாரிகள் பவானிசாகர் அணை நீர்மட்டத்தை நேரடியாக கண்காணிக்கும் வகையில் தண்ணீர் அளவீடு கருவி அமைந்துள்ள பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் மூலம் தண்ணீர் அளவிடும் கருவியில் உள்ள அளவினை பவானிசாகர் அணை கோட்ட செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் அலுவலகத்தில் உள்ள கணக்கீட்டு அலுவலர் ஆகிய மூன்று பேர் அறிந்து கொள்ளும் வகையில் ஆன்லைனில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


Share this:

Related posts

மக்களே உஷார்: இந்த 5 மாவட்டங்களை அடித்து நொறுக்கப்போகிறது கனமழை…!!

THAVAMANI NATARAJAN

சேலம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று… நேற்று ஒரே நாளில் 5 பேர் பலி..!!!

THAVAMANI NATARAJAN

“என் புருஷன் உயிரோட இருந்திருந்தால் இதை தான் செஞ்சிருப்பார்”… மருத்துவர்களை கண்கலங்க வைத்த காவலர் மனைவி…!

THAVAMANI NATARAJAN

ஆளுநர் மாளிகையில் 3 பேருக்கு கொரோனா… தனிமைப்படுத்திக்கொண்டார் பன்வாரிலால் புரோகித்….!!

NEWSKADAI

மக்களே உஷார்: விரைவில் நிரம்ப போகிறது பவானி சாகர் அணை… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

THAVAMANI NATARAJAN

தமிழக சாலைகளில் திடீர் மாற்றம்… விபத்துக்களை குறைக்க புதிய யுக்தி…!!

THAVAMANI NATARAJAN