Newskadai.com
தமிழ்நாடு

தொழிற்சாலை கழிவுகளால் நாசமாகும் நொய்யல் ஆறு – அதிரவைத்த ஆய்வு..!!

Share this:

நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கன உலோகங்கள் மற்றும் வேதிப் பொருட்கள் கலப்பால் நொய்யல் ஆற்றுநீர் மாசடைந்துள்ளது பாரதியார் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. கோவை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக பயணித்து காவிரியுடன் கலக்கிறது நொய்யல் ஆறு.

சுமார் 36 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இதனால் பாசன வசதி பெறுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நொய்யல் ஆற்றில் கழிவுகள் கலந்து சீர்கேட்டை ஏற்படுத்திவருகிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நொய்யல் ஆற்றின் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தியது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கன உலோகங்களின் அளவு அதிகம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பேராசிரியர் டி.முரளிசங்கர் கூறியதாவது: அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் (யுஎஸ்இபிஏ) தரத்தின்படி ஒரு லிட்டர் நீரில் 0.5மில்லி கிராம் இருக்க வேண்டிய துத்தநாகம் 2.75 மில்லிகிராமும், 0.05 மில்லிகிராம் இருக்க வேண்டிய காரியம் 10.74 மில்லிகிராமும், இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) தரத்தின்படி 250 மில்லிகிராம் இருக்க வேண்டிய குளோரைடு 1,010 மில்லி கிராமும், 45 மில்லிகிராம் இருக்க வேண்டிய நைட்ரேட் 250 மில்லி கிராமும், 200 மில்லிகிராம் இருக்க வேண்டிய நீரின் கடினத்தன்மை 1,075 மில்லிகிராமும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரே காலநிலையில் 3 முறை எடுக்கப்பட்ட மாதிரியின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளது. பல்வேறு காலங்களில் பல மாதிரிகளை சேகரித்து தொடர்ந்து ஆய்வு செய்யும்போது மேலும் உறுதியான முடிவுகள் கிடைக்கும் என அவர் கூறினார். தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் உலோகக் கழிவுகளும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. 

இதனால் அந்த நீரை அருந்தும் கால்நடைகள் மீன்கள் மற்றும் மனிதர்களுக்கும் பலவகையான நோய்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நொய்யல் ஆற்றின் பாதையில் எந்தெந்த இடங்களில் ரசாயன கழிவுகள் அதிகமாக கலக்கின்றன என்பதை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share this:

Related posts

ஈ-பாஸால் எல்லாம் நாசமா போச்சு: குமுறும் விவசாயிகள், சிறு தொழில் முனைவோர்…

MANIMARAN M

ரெடியா இருங்க ஜலகண்டாபுரம்… இன்னைக்கு வீட்டுக்கே வரப்போறாங்க… தூள் பறக்கும் தொற்று தடுப்பு…!

AMARA

தூக்கத்தில் நடந்த சோகம்… தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி…!!

THAVAMANI NATARAJAN

திருநங்கைகளை கொலை செய்த கொலையாளிகளை தட்டித் தூக்கிய நெல்லை போலீசார்… திடுக்கிடும் தகவல்கள்…

MANIMARAN M

சேலத்தை குலை நடுங்க வைக்கும் ’கொரோனா’… பலி எண்ணிக்கையை பார்த்து பதறும் மக்கள்…!!

NEWSKADAI

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் அதிரடி திருப்பம்… ஆரம்பித்து வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…!!

THAVAMANI NATARAJAN