Newskadai.com
சினிமா

திரும்பி வருவாரா எஸ்.பி.பி?… கண்ணீர் மல்க பேட்டியளித்த இயக்குநர் பாரதிராஜா…!

Share this:

கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து 51 நாட்களாக சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாக அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றங்கள் காணப்பட்ட நிலையில், நேற்று முதல் மீண்டும் கவலைக்கிடமான நிலலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து கேட்டறிய அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண், மகள் பல்லவி, மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மேலும் இயக்குநர்கள் பாரதிராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். தொடர்ந்து இளையராஜா உள்ளிட்ட திரைத்துறையினர் வரலாம் என்பதால் மருத்துவமனையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த பாரதிராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சில சூழ்நிலைகளில் எனக்கு வார்த்தைகள் வராது. நான் மிகவும் உணர்ச்சிவசப் படக்கூடியவன், மிகப்பெரிய கலைஞன் என்பதையும் தாண்டி எஸ்.பி.பி. என்னுடைய 40 ஆண்டு கால நண்பன். என்னால் இந்த துக்கத்தை எந்த விதத்தில் பகிர்ந்து கொள்வது என தெரியவில்லை. உலக மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரார்த்தனை செய்தோம், எழுந்து வருவார் என எதிர்பார்த்தோம்.

SPB Bharathiraja

ஆனால் அது நடக்கவில்லை. நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கு, அதனுடைய சக்தி தான் எல்லாம். இயற்கைக்கு முன்பு நாம் எல்லாம் ஒன்றுமே இல்லை. இன்னமும் எனக்கு சிறிது நம்பிக்கை உள்ளது. அந்த அற்புதமான கலைஞன், மனிதன் திரும்பி வருவான் என நினைக்கிறேன் என கூறும் போதே பாரதிராஜா கண்ணீர் விட ஆரம்பித்தார். அதனால் பேட்டியை பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்பினார்.


Share this:

Related posts

“எஸ்.பி.பி. விழிப்புடன் நல்ல நிலையில் இருக்கிறார்”… மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை…!!

NEWSKADAI

“அப்பா உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”… எஸ்.பி.பி.சரண் வேண்டுகோள்…!!

AMARA

குழந்தை பிறந்தநாளுக்கு நீங்க போடுற டிரஸா இது?… மோசமான உடையை பார்த்து முகம் சுளிக்கும் எமி ரசிகர்கள்…!!

THAVAMANI NATARAJAN

அவசர அவசரமாக முதல்வர் வீட்டிற்கு வந்த விஜய் சேதுபதி… அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவங்கள்…!

NEWSKADAI

“I am a Tamil பேசும் இந்தியன்”… மகனுடன் சேர்ந்து கெத்தாக போஸ் கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன்…!!

NEWSKADAI

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

NEWSKADAI