Newskadai.com
சினிமா

“இத்தோட நிறுத்திக்கிட்ட நல்லது”… விஜய், சூர்யா குடும்பம் மீது வரம்பு மீறும் விமர்சனம்… மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பாரதிராஜா…!!

Share this:

மீரா மிதுன் என்றாலே சர்சைகளின் நாயகி என்றே கூறவேண்டும். திரையுலகில் யாரையும் குறைகூறாமல் விடுவதில்லை. அந்த பட்டியலில் தற்போது  விஜய் மற்றும் சூர்யா இடம் பிடித்துள்ளனர். திரைப்பட உலகின் முன்னனி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தின் மீதும், மீரா மிதுன் அவதூறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.    

சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நெப்போட்டிஸம் பெரிய அளவில் உள்ளது, அதில் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் அனைவரும் நெப்போட்டிஸத் தயாரிப்புகள் என மீரா மிதுன் அவதூறாக பேசியிருந்தார். இதனால் மீரா மிதுன் மீது விஜய், சூர்யா ரசிகர்கள் தங்களின் கோபத்தை வெளிபடுத்தும் வகையில் சமூக வளைதளங்களில் விமர்சித்த வண்ணம் உள்ளனர்.

 

அதோடு மீரா மிதுன் மீது விஜய் ரசிகர்கள் காவல்துறையில் புகார் அளித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து மீரா மிதுனும் விஜய் ரசிகர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கவுள்ளதாக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகர்களை குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக பேசுவது மிகவும் தவறான செயல் என இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இயக்குநர் பாரதிராஜா கூறுகையில்..

அழகிய ஓவியத்தின் மீது சிலர் சேறடிப்பது போல் பேசுவது கண்டனத்திற்குரியது. நடிகர்கள் விஜய், சூர்யா அவர்களின் குடும்பங்கள் மிகவும் கண்ணியமானவை. மேலும் மனிதாபிமான பணிகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் விஜய். பல குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் பணியை சூர்யா செய்து வருகிறார். சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையோ அல்லது அவர்களின் குடும்பத்தினர் பற்றியோ அவதூறாக விவாதம் செய்வது கண்டனத்துக்குரிய செயல். தான் புகழ் அடைவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது, இதற்கு அனைவரும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினுக்கு கொரோனா… கலக்கத்தில் கோலிவுட்…!!

AMARA

“என் இனிய தமிழக அரசே…” பாரதிராஜாவின் உருக்கமான கடிதம்

MANIMARAN M

இயக்குநர் அட்லி வீட்டில் திடீர் மரணம்… துடிதுடிக்கும் சோகத்துடன் பகிர்ந்த உருக்கமான பதிவு…!!

AMARA

விஜய் டி.வி. புகழ் ‘வடிவேல்’ பாலாஜி திடீர் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

NEWSKADAI

இசை ஞானிக்கே இப்படியொரு பரிதாப நிலையா?…. இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது புகார்…!!

NEWSKADAI

கண்ணில் கனல் தெறிக்கும் கமல்… வெளியானது “பிக்பாஸ் சீசன் 4” ப்ரோமோ வீடியோ…!!

AMARA