Newskadai.com
உலகம்

கதறி துடித்த இந்துக்கள்… உடனடி உத்தரவு போட்ட பக்ரைன் அரசு… மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை!!!

Share this:

பக்ரைன் நாட்டில் கடந்த மாதம் நான் கண்டு மெய்சிலிர்த்து நின்ற ஒரு நிகழ்வை இங்கு பகிர்கிறேன்…

Covid -19 நோய் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்த இரண்டு இந்துக்களின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களின் உடலை எரியூட்ட ஒப்புதல் அளித்தது, இந்து மையானத்திற்கு உடல்களை அனுப்பிவைத்தது, அரபு நாட்டில் இந்து மயானமா? என்று கேட்பவர்களுக்கு. பக்ரைன் அரசு இங்கு பிழைக்க வந்திருக்கும் இந்து மக்களுக்காக இலவச மயானம் ஒன்றை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதனை வட இந்திய பாட்டியா சமுதாய சங்கம் ஒன்று நிர்வகிக்கிறது. அங்கு உடல்கள் எரியூட்டப்படுகின்றன (ஒரு உடலை எரிக்க சுமார் 50,000 ரூபாய் பாட்டியா சமூகம் நடத்தும் சங்கத்தினருக்கு கட்ட வேண்டும்)

உடல் வந்து சேரும் முன்பே சுடுகாட்டை அடைந்த நான் உட்பட நான்கு பேரும் அங்கிருந்த காவலாளியும் COVID உடலை எப்படி எரியூட்டுவது , யார் உடலை எடுத்துவைப்பது என்ற குழப்பத்திலும் பயத்திலும் நின்றிருந்தோம். COVID 19 நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த உடலை எரிப்பது அன்று தான் முதன் முறையாக நடக்க இருந்தது. சற்று நேரத்தில் காவல்துறை மற்றும் civil defense எனப்படும் தீயணைப்பு துறைவண்டிகள் வரிசை கட்ட , ஒருஆம்புலன்சில் முறையாக plastic sheetல் சீலிடப்பட்ட இரண்டு உடல்கள் வந்தன. தீயணைப்புதுறை வீரர்கள் எங்களை யார் எவர் என்று கேட்டபின் சுடுகாட்டில் இருந்து வெளியேற்றி சற்று தொலைவில் நிற்கவைத்து, சுடுகாட்டின் பெரியகதவுகளை திறந்துவைத்து நடப்பதை நாங்கள் பார்க்கும்படி ஏற்பாடு செய்தனர்.

ஏழு வீரர்கள் முழு பாதுகாப்பு உடையுடனும், முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் சுமந்து உள்ளே சென்று காவலாளியை அழைத்து சற்றுநேரம் விவாதித்துவிட்டு அவருக்கும் பாதுகாப்பு உடைகளை அணிவித்து சற்று தள்ளி நிற்க வைத்துவிட்டு, ஏழுவீரர்கள் மட்டும் உடல்களை ஆம்புலன்சில் இருந்து இறக்கி ஏற்கனவே தயாராக இருந்த சிதையின் மேல் பூவைவைப்பது போல் மெல்ல வைத்துவிட்டு, உடம்பின் மீது விறகுகளை மிக மெதுவாக அடுக்கினார்கள். பின்காவலாளி (இந்து) கையில் சுமார் 10 அடிநீளம் இருந்த கம்பியில் தீபந்தை கொடுத்து தீவைக்க சொன்னார்கள். நடந்தவைகளை பிரமிப்புடன் பார்த்துகொண்டிருந்த எங்களை இந்நிகழ்வு உணர்ச்சிவயப்பட்டு மெய்சிலிர்க்க வைத்தது, எரியூட்டபட்ட உடல்களை முழுவதுமாக தீ சூழும் வரை அந்த ஏழுவீரர்களும் சிதையில் இருந்து சற்று தூரத்தில் Attention Positionல் சுமார் 10 நிமிடம் வரை அமைதியாக நின்ற காட்சிதான்.

இப்பணியில் ஈடுபட்ட தீயணைப்புவீரர்கள் அனைவரும் அரேபிய முஸ்லிம்கள். உடலை எரிப்பது என்பதுஅவர்களுக்குபுதிது , இந்துக்களின் எரியூட்டும் மதசடங்கை பார்த்திருக்கவும் வாயப்பில்லை. மனிதநேயம் தான்அங்கே விஞ்சிநின்றது. COVID19 உடல் என்பதற்காக பயப்படாமலும், மாற்று மத சடங்கை நாம் செய்கிறோமே என்று சங்கடபடாமல் முழுமரியாதையுடனும் அவர்கள் தகனம்செய்தவிதம் என் நாட்டில்மதங்களின்பெயராலும், COVID 19 பெயராலும்நடக்கும்அவலங்களை எனக்கு நினைவுபடுத்தி தலைகுனிய செய்தது – எம்ஜிகே.முகம்மது ஹூசைன்மாலிம், பாரதி தமிழ் சங்கம், பக்ரைன்.


Share this:

Related posts

வெரிகுட் நியூஸ்: சிங்கிள் டோஸில் குணமாகும் கொரோனா… வந்தாச்சு பவர்ஃபுல் தடுப்பூசி..!!

MANIMARAN M

பண மழையாய் மாறிய ‘கல்’ மழை… விசித்திர கற்களால் அடித்தது யோகம்…!!

THAVAMANI NATARAJAN

டிக்டாக்கை ஒன்னும் பண்ணமுடியாது போல… கைமாற்றும் வேலை ஆரம்பம்…

MANIMARAN M

முற்றும் அமெரிக்கா – சீனா பனிப்போர்… தூதரகங்களை மூட அதிரடி உத்தரவு…!

NEWSKADAI

தமிழக மருத்துவ மாணவர்களை காவு வாங்கிய வோல்கா நதி…

MANIMARAN M

மக்களால் நான்… மக்களுக்காக நான்… பதவி விலகிய பிரதமர்…

MANIMARAN M