Newskadai.com
இந்தியா

பிரம்மபுத்திரா நதிக்கு கீழே பலே திட்டம்… சீனாவுக்கு இந்தியாவின் அதிர்ச்சி வைத்தியம்…!!

Share this:

உலகின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்று பிரம்மபுத்திரா. பூடான் இந்தியா வங்கதேசம் நாடுகளை கடந்து இறுதியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் கடுமையாக பாதிக்கப்படும் மாநிலம் அசாம். வெள்ளப்பெருக்கால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழப்பதும் சில நூறு உயிரிழப்புகள் ஏற்படுவதும் இங்கு தொடரும் துயரமாக மாறிவிட்டது.

அசாம் மாநில அரசு தகவலின்படி இந்த ஆண்டு 85 பேர் வெள்ளப்பெருக்கினால் உயிர் இழந்துள்ளனர். 70 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமிய மக்களின் வாழ்க்கையை அவ்வப்போது புரட்டிப்போடும் இந்த பிரம்மபுத்திரா ஆறு இப்போது ராணுவ முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நதியை இந்திய ராணுவம் அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாக பார்க்கிறது. 1962ல் இந்தியா- சீனா போரின் போது இந்த நதி வழியாக சீன ராணுவம் அதிக அளவில் ஊடுருவியது.

தற்போதும் கூட இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களை எதிரிகள் தகர்த்தால் அசாம் – அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டாகும். ராணுவம் சாலை மார்க்கமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையே செல்வது பாதிக்கப்படும். எனவே தான் இந்திய அரசு இந்த பிரம்மபுத்திரா ஆற்றுக்கு அடியில் 15 கிலோமீட்டர் நீளத்திற்கு சுரங்க சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.

அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தையும் இணைக்கும் இந்த சுரங்க சாலை திட்டம் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் முழு இந்தியாவின் பாதுகாப்பிற்காக போடப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க திட்டமாகும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தேசிய ஊடகங்களில் இது பற்றிய செய்திகள் வராத நிலையில் அசாமிய ஊடகங்கள் இது பற்றிய பல செய்திகளை வெளியிட்டு வருகின்றன. நாட்டையும் அதன் எல்லைகளையும் காப்பது அரசின் கடமை அதைவிட தலையாய கடமை மக்களை காப்பது ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான மக்களை காக்க மத்திய மாநில அரசுகள் நிரந்தர திட்டங்களை முதலில் உருவாக்க வேண்டும் என்பதே அசாமில் உள்ள மக்களின் எதிர்பார்ப்பு.


Share this:

Related posts

கொரோனாவை அடுத்து பேய் மழையிடம் சிக்கிய மும்பை… கரைபுரளும் வெள்ளத்தால் கவலையில் மக்கள்…!!

MANIMARAN M

“இவர்களால் தான் நாடு முன்னேறும்”… நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி பெருமிதம்…!!

MANIMARAN M

யோகி இமேஜை டேமேஜ் செய்த பாஜக எம்.எல்.ஏ… ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆளும் கட்சிக்காரரே குற்றச்சாட்டு….!

NEWSKADAI

உடனே தடை பண்ணுங்க… இல்லாவிட்டால் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் … வைகோ கொந்தளிப்பு!

AMARA

நாட்டு நலனுக்கு எதிரான கருத்துக்களை பரப்பாதீர்கள்… ராகுல் காந்தியை மறைமுகமாக எச்சரித்த பிரதமர்…!

NEWSKADAI

பற்றி எரியும் பெங்களூரு… துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழப்பு… பரபரப்பு காட்சிகள்…!!

MANIMARAN M