Newskadai.com
இந்தியா

பெங்களூர் கலவரம்: இந்து கோயிலை சுற்றி இஸ்லாமியர்கள் அமைத்த பாதுகாப்பு அரண்… நெகிழ்ச்சி வீடியோ…!!

bangalore
Share this:

பெங்களூரில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் மதம் குறித்து அவதூறான பதிவை பதிந்துள்ளார். இது குறித்து நவீனுக்கு எதிராக இஸ்லாமியர்கள் புகார் கொடுத்தும் போலீசார் நவீனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த மக்கள் நேற்றிரவு புலிகேசி நகரில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தி வீட்டை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

bangalore

அப்போது கூட்டத்தில் ஒரு சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலவரத்தில் குதித்ததை அடுத்து பெரும் பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்தது. எம்.எல்.ஏ.சீனிவாச மூர்த்தி வீடு முற்றிலுமாக சூறையாடப்பட்டது. அப்பகுதியில் இருந்த வாகனங்கள் அனைத்தும் தீ வைப்பு கொளுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டக்காரர்களை விரட்டினர். துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: http://பற்றி எரியும் பெங்களூரு… துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழப்பு… பரபரப்பு காட்சிகள்…!!

தற்போது பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சியான காரியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நேற்று எம்.எல்.ஏ.வுக்கு எதிரான போராட்டம் மதக்கலவரமாக திசை திருப்பப்படக்கூடாது என்பதற்காக அந்த பகுதியில் இருந்த இந்து கோயிலை சுற்றிலும் இஸ்லாமியர்கள் மனித சங்கலி போல் கைகோர்த்து நின்று பாதுகாப்பு அரண் அமைத்தனர். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.


Share this:

Related posts

கொரோனா தொற்றுக்கு பலிகடா ஆக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத்… அரசுக்கு குட்டு வைத்த மும்பை உயர்நீதிமன்றம்…!!

MANIMARAN M

பெருவெள்ளத்தில் பிறந்த புது உயிர்… தத்தளித்த கர்ப்பிணிக்கு மீட்பு படகில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

NEWSKADAI

உச்சகட்ட பாதுகாப்பில் அயோத்தி… களைகட்டும் ராமர் கோயில் பூமி பூஜை…!!

THAVAMANI NATARAJAN

மத்திய கல்வி அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்… 40% JEE தேர்வு மாணவர்களின் நிலை என்ன..?

MANIMARAN M

“ஒருபோதும் மொழி திணிப்பு கிடையாது” : மத்திய அமைச்சர் திட்டவட்டம்…!!

MANIMARAN M

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்…

MANIMARAN M