Newskadai.com
விளையாட்டு

2020 IPL கொண்டாட்டம் : போட்டி அட்டவணை வெளியீடு…

Share this:

2020 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ கடந்த மாதம் முடிவு செய்தது. இப்போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக கடந்த மாதம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி உள்ளிட்ட ஐ.பி.எல் அணி வீரர்கள் அமீரகம் சென்றடைந்தனர்.

அமீரகம் சென்றடைந்த வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் 13 நபருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டனர். இதற்கிடையில் CSK நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தனது சொந்த காரணங்களுக்காக போட்டியிலிருந்து வெளியேறி தாயகம் திரும்பினார். இவ்வளவு பரபரப்புகளுடன் கூடிய சூழலில் அமீரகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐ.பி.எல்.போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நாள் போட்டியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK) அணியும், மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும் மோதுகிறது.


Share this:

Related posts

“தல தல தான்” புகழ்ந்து தள்ளிய சைமன்….

MANIMARAN M

ஓய்வை அறிவித்தார் “தல” தோனி… உற்சாகம் இழந்த கிரிக்கெட் ரசிகர்கள்…!!

AMARA

ரெய்னா குடும்பத்தில் அரங்கேறிய துயர சம்பவம்… IPL-லிருந்து விலகியது இதற்காக தானாம்…!

MANIMARAN M

குஷியான செய்தி: லாக்டவுனை தவிடு பொடியாக்கிய ஐபிஎல்… செப்டம்பரில் போட்டிகள் தொடக்கம்!!

NEWSKADAI

சீனப் பகையால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட பல கோடி இழப்பு

MANIMARAN M

“எல்லா புகழும் தமிழக மக்களுக்கே”… கேல் ரத்னா விருது பெற்ற சேலம் மாரியப்பன் பெருமிதம்…

THAVAMANI NATARAJAN