Newskadai.com
விளையாட்டு

ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றிக்கு இதுதான் காரணமாம்… ஐபிஎல் 10வது ஆட்டத்தில் நடந்த அதிரடி

Share this:

13-வது ஐபிஎல் சீசனின் 10-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஆடிய ஆட்டத்தில் இரு அணிகளும் சமமான ரன்கள் எடுத்ததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் பயன்படுத்தப்பட்டது. சூப்பர் ஓவரில் பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, குயின்டன் டி காக் களமிறங்கினர். முதல் ஓவரில் 14 ரன்கள் எடுத்து அதிரடியாக தொடங்கினாலும், 2-வது ஓவரில் ரோஹித் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் உடானா பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. எனினும் கிஷன் மட்டும் அரைசதத்துடன் நம்பிக்கையளித்து வந்தார். போலார்ட் நிதானம் காட்டி அவருக்கு ஒத்துழைப்பு தந்தார். ஒரு கட்டத்தில் மும்பை வெற்றி பெற 24 பந்துகளில் 84 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. 17-வது ஓவரில் மும்பை அணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

ஸாம்பா வீசிய இந்த ஓவரில் 6பந்துகளையும் எதிர்கொண்ட போலார்ட் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி உள்பட 27 ரன்கள் எடுத்தார். முதல் 10 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர், அடுத்த 10 பந்துகளில் 39 ரன்களை எடுத்தார். மும்பை வெற்றி பெற்றுவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் கிசன் அவுட்டானார். இதனால் ஒரு பந்து மீதம் இருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மும்பை அணி 201 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து சூப்பர் ஓவர் வீசி வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய மும்பை அணி ஆறு பந்துகளுக்கு ஏழு ரன்களை எடுத்தது. 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி இறுதி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை சுவைத்தது.


Share this:

Related posts

தோல்வியிலும் வரலாற்று சாதனை செய்த சிஎஸ்கே..!!

NEWSKADAI

”ஐபிஎல் போட்டியிலிருந்து இதனாலதான் விலகினேன்..!!” சுரேஷ் ரெய்னா அதிரடி…!!

NEWSKADAI

அடித்து நொறுக்கி துவம்சம் செய்த சன் ரைசர்ஸ்..!!! சோதனையாய்த் தோற்ற டெல்லி…!!!

MANIMARAN M

#IPL : சிஎஸ்கேவின் மோசமான பேட்டிங்… வெற்றியை தட்டிப் பறித்த ராஜஸ்தான்…

MANIMARAN M

அதிரிபுதிரி IPL ஆரம்பம்… சென்னையுடன் மோதும் மும்பை…

MANIMARAN M

ரெய்னா குடும்பத்தில் அரங்கேறிய துயர சம்பவம்… IPL-லிருந்து விலகியது இதற்காக தானாம்…!

MANIMARAN M