Newskadai.com
உலகம்

தியாகத் திருநாள்… நிபந்தனையற்ற அன்பு செய்வோம் வாருங்கள்…

Share this:

அந்த மனிதர் இதற்கு முன்பும் பல கனவுகளை கண்டிருக்கிறார். ஒவ்வொரு கனவும் அவருக்கு மகிழ்ச்சியையே கொடுத்திருக்கிறது. கனவின் மூலமாகவே இறைவன் தான் செய்யவேண்டிய கடமைகளை தனக்கு சுட்டிக் காட்டி வருவதாக நம்பினார். அவர் வாழ்நாள் முழுவதும் அவர் நம்பிக்கை படியேதான் நடந்து வந்திருக்கிறது. உருவமற்ற இறைவனை வணங்க ஆரம்பித்தது, ஓரிறைக் கொள்கையை மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மக்களிடம் எடுத்துரைத்து வருவது, தீமையை விட்டு நன்மையின்பால் மக்களை அழைத்து வருவது, தன்னுடைய திருமணம், வயதான காலத்தில் கிடைத்த குழந்தை பாக்கியம் உட்பட அனைத்து நிகழ்வுகளும் இதுநாள் வரை கனவில் கண்டபடி தான் நடந்து வந்திருக்கிறது.

மேலும் படிக்க:http://“உள்ளங்களில் நல்லிணக்கம் நிலவ வாழ்த்துக்கள்”… முதல்வர், துணை முதல்வர் பக்ரீத் திருநாள் வாழ்த்து…!!

தன் ஆசை மனைவியையும் அருமை குழந்தையையும் மக்கா என்னும் வறண்ட மலைப் பிரதேசத்தில் விட்டு விட்டு வந்ததும் இந்த கனவினால்தான். ஆனால் இப்பொழுது வந்திருக்கும் கனவு சிக்கலானது. தூக்கம் கலைந்து எழுந்த அந்த மனிதர் இறைவனை வணங்கிவிட்டு தன் மனைவியின் இல்லம் நோக்கி பயணிக்க தொடங்கினார். அவர் இருந்தது பாலஸ்தீனத்தில். அவரின் மனைவி இருந்ததோ மக்காவில்.

பல ஆண்டுகளாக கணவனைப் பிரிந்து குழந்தையோடு வாழ்ந்து வந்த அப்பெண் தொலைதூரத்தில் தன் கணவன் வருவதை கண்டு அகமகிழ்ந்தாள். அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இத்தனை ஆண்டுகள் தேக்கி வைத்திருந்த அனைத்து விஷயங்களையும் ஆசையாசையாய் சொல்கிறாள். அந்த மனிதரின் முகமோ எந்த விதமான உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் இருக்கிறது. மனைவிக்கு புரிந்துவிடுகிறது. தன் கணவர் வந்திருப்பது தன் மேலுள்ள பிரியத்தினால் அல்ல, வேறு ஏதோ இறை கட்டளையை நிறைவேற்ற வந்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்கிறாள். வந்த காரியம் என்னவென்று மனைவி கேட்க, “ஆசை மகனை தன் கையால் அறுத்து பலியிடுவதாக” தான் கண்ட கனவை அந்த மனிதர் தன் மனைவியிடம் கூறுகிறார்.

மேலும் படிக்க:http://கொரோனாவை வைத்து ட்ரம்ப் போட்ட அதிரடி திட்டம்… தேர்தலை தள்ளிவைக்க போட்ட மாஸ்டர் பிளான்…!!

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தந்தையிடம் வருகிறான். அவனிடமும் தன் கனவைப் பற்றி கூறுகிறார். அந்தச் சிறுவனோ துளியும் பயப்படாமல் “இதுவரை இறைகட்டளைக்கு மாறு செய்யாத நீங்கள் இந்த விஷயத்தில் யோசிக்க வேண்டாம். இறை கட்டளையை நிறைவேற்றுங்கள். காரணம் இன்றி இறைவன் எதையும் நடத்துவதில்லை” என்று கூறுகிறான்.

சிறுவயதில் தன் மகன் கொண்டிருக்கும் இறை நம்பிக்கை அவரை மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது. மறுநாள் காலை இறைவனை வணங்கிவிட்டு மகனை அழைத்துக்கொண்டு கனவில் கண்ட பலியிடும் இடம் செல்கின்றார். அறுத்து பலியிட தனது கத்தியை மகனருகே கொண்டு செல்லும் போது ஒரு குரல் அவரை தடுத்து நிறுத்துகிறது. அது கனவில் அவருக்கு கட்டளையிடும் குரல். குரல் கேட்ட மாத்திரத்தில் மெய்மறந்து நின்று விடுகிறார் அந்த மனிதர். “உமது இறைநம்பிக்கையை பரிசோதனை செய்வதற்காகவே இந்நிகழ்வு” என்று இறை குரல் கூறுகிறது. இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு தன் ஆசை மகனை ஆரத்தழுவி அழைத்துக் கொண்டு செல்கிறார்.

அந்த மனிதர் இப்ராஹீம் நபி, அவருடைய மகன் இஸ்மாயில் நபி என்று அழைக்கப்படுகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து தான் முதன்முதலாக கட்டிட வடிவில் மக்காவில் இருக்கும் காபாவை கட்டினர்.

ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் அங்கு செய்யும் கடமைகள் பலவும் இவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களே. இப்ராஹீம் நபி இறைவன் மேல் வைத்திருந்த அன்பு, மனைவி கணவன் மேல் வைத்து இருந்த அன்பு, நம்பிக்கை போல், தன் தந்தை மீதும் இறைவன் மீதும் இஸ்மாயில் நபி கொண்டிருந்த நேசத்தைப் போல் நாமும் நம் சக மனிதர்களை நிபந்தனையற்ற அன்பினால் நேசிப்போம். வரலாற்று சம்பவங்களின் நினைவாக இன்றைய தினம் ஹஜ் யாத்திரை மேற்கொண்டு இருப்பவர்களுக்கும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


Share this:

Related posts

கொடூர நாகத்துடன் மல்லுகட்டும் பெண்… பகீர் கிளப்பும் திகில் வீடியோ…!

NEWSKADAI

பிரிட்டனில் கட்டாயமாகும் முகக்கவசம்.. எச்சரிக்கும் அரசு…

NEWSKADAI

செவ்வாய் கிரக ஆய்விற்கு புதிய ரோபோ… நாசா விஞ்ஞானிகளின் வரலாற்று சாதனை…!

NEWSKADAI

அமெரிக்காவில் சிக்கிய சீன உளவாளி… சிங்கப்பூர் குடிமகனின் கைதால் பரபரப்பு…!

NEWSKADAI

மெகா ஊழல்…. முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை…!!

NEWSKADAI

வடகொரிய அதிபரை வச்சி செஞ்ச கொரோனா… முதல் நபருக்கு உறுதியானது தொற்று…!

NEWSKADAI