Newskadai.com
தேர்டு ஐ விளையாட்டு

“தல” தோனி திடீர் ஓய்வை அறிவிக்க காரணம் இவர்களா?… பரபரப்பு பின்னணி…!!

Share this:

எம்.எஸ். தோனி உலகமறிந்த இந்திய பெயர். சமகால நாயகன். உலக கிரிக்கெட் வரலாற்றில் உன்னத பக்கங்களுக்கு சொந்தக்காரன். இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றிகளை தேடித் தந்ததில் முதலிடம் பிடிக்கும் கேப்டன். முன்கள வீரர்கள் அவுட் ஆன பின்பு சோதனையான காலத்தில் களத்திற்கு வரும் தோனி புத்திசாலித்தனமாகவும், அதிரடியாகவும், சூழ்நிலைக்குத் தக்கவாறு சிறப்பாகக் களமாடி தனது அணியை வெற்றி பெறச் செய்வதில் வல்லவன். “விளையாட்டை வெற்றிகரமாக முடிப்பதில் வித்தகன்” என்று கிரிக்கெட் உலகமே பாராட்டும் வீரன் நம் மகேந்திர சிங் தோனி.

இன்று யாரும் எதிர்பார்க்காத, இல்லை இல்லை… அவரது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமே எதிர்பார்க்காத, அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் ஒன்றை போகிற போக்கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சென்றுள்ளார். தோனியால் எளிமையாக வெளிப்படுத்தப்பட்ட அந்த அதிர்ச்சித் தகவல்… “சர்வதேச ஒருநாள் மற்றும் 20/20 போட்டிகளில் இருந்து தாம் விடைபெறுவதாக” அறிவித்திருந்தார்.

தோனியின் ஓய்வு அறிவிப்பு வெளியானவுடன் சக கள வீரர்கள், முன்னாள் வீரர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், அயல் தேசத்து கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தும், நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு ஆச்சரியம் என்னவென்றால் ஒரு ஈ, காக்கா, குருவி, குஞ்சு கூட.. ஏன் இப்படி முடிவு எடுத்தீர்கள்?… உங்களால் இன்னும் சில ஆண்டுகள் விளையாட முடியும்… எதுவாக இருந்தாலும் ஐபிஎல் போட்டிகள் முடிந்து பார்த்துக் கொள்ளலாம்… உலக கோப்பை வரை உங்களது சேவை இந்திய அணிக்கு தேவை… உங்களுடைய ஓய்வு அறிவிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம்… என்ற குரல் எங்கிருந்தும் யாரிடமிருந்தும் எழவில்லை.

இதுதான் ஆச்சரியம். ஒரு திறமையான நிர்வாகி அல்லது தொழிலாளி வேலையை விட்டு விலகுவதாக அறிவித்தால் அந்த நிறுவனமோ அல்லது முதலாளியோ அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள், மீண்டும் பணியில் சேர வற்புறுத்துவார்கள். ஆனால் தோனியின் விஷயத்தில் இது ஏன் நடக்கவில்லை? சக வீரர்கள், தேர்வு குழுவினர், பயிற்சியாளர், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பீடம் உட்பட யாரிடமிருந்தும் அக்கறையான, கரிசனமான, கனிவான வார்த்தைகள் ஏன் வரவில்லை.

இவர்கள் அனைவருக்குமே இந்திய கிரிக்கெட் அணியில் தோனியின் இருப்பு என்பது வெறுப்புக்குறியது ஆனது ஏன்? தோனியால் ஓய்வு அறிவிப்பு வெளியிடப்பட்ட உடன் பட்டாசு வெடித்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறார்களே… என்ன மனிதர்கள் இவர்கள்? உண்மையைச் சொல்லப் போனால் இந்திய கிரிக்கெட் அணி, கிரிக்கெட் வாரியம், அது சார்ந்த அத்தனை அமைப்புகளிலும் குரூரமான மனிதர்களே நிரம்பி இருக்கிறார்கள் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

கடந்த ஓராண்டாக தோனி சரியாக விளையாடவில்லை என்பது உண்மைதான். அதற்காக அந்த மனிதனை எள்ளி நகையாடுவதும், அணியை விட்டு வெளியேறும் மனநிலைக்கு தள்ளுவதும் எவ்வளவு கொடுமை. இந்திய அணியின் வெற்றிக்கு எந்த பங்களிப்பும் செய்யாத பல ஜாம்பவான்கள் பல ஆண்டுகளாக அணியில் இடம் பெற்றிருந்ததை நாம் அறிவோம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை பொறுப்பிற்கு வந்ததிலிருந்து சில காட்சிகள் அரங்கேறின. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “ஐபிஎல் தொடரில் விளையாடி தன்னை நிரூபித்தால் மட்டுமே தோனிக்கு மீண்டும் அணியில் இடம் பற்றி பரிசீலிக்கப்படும்” என்ற தோரணையில் பேசினார்.

கடந்த 10ஆண்டுகளாக கனவில் கூட நினைவு கூறப்படாத கங்குலியின் திரைமறைவு திறமைகளை மீடியாவின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர், சில கிரிக்கெட் ஜாம்பவான்கள். அவர்கள் நோக்கம் கங்குலிக்கு சொம்பு தூக்குவது. “கங்குலி ஒரு அருமையான, திறமையான அணியை உருவாக்கி விட்டுச் சென்றார். அந்த திறமையான அணி பல கோப்பைகளை வென்றது. அந்த திறமையான அணிக்கு தோனி கேப்டனாக விளங்கினார். “எவ்வளவு விஷம் தோய்ந்த வார்த்தைகள். அதாவது தோனி என்கிற மனிதன் இந்திய கிரிக்கெட் அணியில் இல்லாமல் இருந்திருந்தால் கூட இந்திய அணி வெற்றிகளை குவித்திருக்கும் அதற்குக் காரணகர்த்தா கங்குலி என்பது இவர்கள் கண்டுபிடிப்பு. என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள்?…

தோனியின் பிள்ளைக்கு கங்குலியின் இன்சியலைப் போட ஏன் துடிக்கிறார்கள்? இப்பொழுது தோன்றிய ஞானோதயம் இத்தனை ஆண்டுகள் ஏன் தோன்றாமல் போனது. இது உங்கள் விருப்பமா? அல்லது நீங்கள் சொம்பு தூக்க விரும்பும் தலைமையின் விருப்பமா? கொடுமை என்னவென்றால் இத்தகைய சொம்பு தூக்கி ஜாம்பவான்களின் கருத்துக்கு எதிர்கருத்தோ, விமர்சனமோ யாரிடமிருந்தும் வரவில்லை. இது நமக்கு மட்டுமல்ல தோனிக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கும்.

பரபரப்பான ஆடு களத்திலேயே நிதானத்தை கடைபிடிப்பதில் உலகப்பிரசித்தி பெற்ற தோனி, சொம்பு தூக்கிகளின் சொல் அம்புகளுக்கு பதில் சொல்லவில்லை. தொடர்ந்து அணியில் இடம்பெற தங்கள் காலை பிடிப்பார் என்று கனவு கண்டு கொண்டிருந்த, வன்மத்துடன் காத்திருந்த அனைவருக்கும் தோனி சொன்ன பதில்தான் Good Bye. மானமுள்ள மனிதர்கள் இப்படித்தான் முடிவெடுப்பார்கள். இந்திய வரலாற்றையே திரித்து எழுதுவதில் புலமை பெற்றவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் சமீபகால வரலாற்றை மாற்றியமைத்த சுயநலமில்லாத ஒரு வெற்றி வீரனின் வெற்றிக் கதைகளை மாற்றியமைப்பது மிகவும் சுலபம். காலம் மாறுகிறது வரலாற்றை எழுதுபவர்கள் மாறுவதில்லை.

இப்படியான பல கருத்துகளை தோனி ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து தங்களின் ஆதங்கத்தை கொட்டித்தீர்க்கின்றனர்…


Share this:

Related posts

ஒட்டுமொத்த நாடும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கிறது… ஆனால் முகேஷ் அம்பானி??

MANIMARAN M

இவர் தான் ஜூனியர் ஹர்திக் பாண்டியா… முதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீரர்…!

AMARA

“ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்ரா”… 54 வயதில் அதிரடியாக கம்பேக் கொடுக்க போகும் மைக் டைசன்…!

NEWSKADAI

IPL கொண்டாட்டம்… தோனி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் சென்றது CSK அணி..

MANIMARAN M

ஐபிஎல் வரலாற்றில் சாதனை: நெருக்கடி கொடுத்த பஞ்சாப், சிக்சர் மழை பொழிந்த ராஜஸ்தான்

NEWSKADAI

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… IPL-லிருந்து விலகிய முக்கிய வீரர்…!!

MANIMARAN M