Newskadai.com
இந்தியா

#BREAKING: பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சம்பவமல்ல… அனைவரையும் விடுவித்தது சிறப்பு நீதிமன்றம்…!!

Share this:

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது.இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ, பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உள்ளிட்ட 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில்16 பேர் விசாரணை காலத்திலேயே உயிரிழந்தனர்.

பாபர் மசூதி தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, 28 ஆண்டுகால வழக்கில் நீதிபதி எஸ்.கே.யாதவ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். 600க்கும் மேற்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது. எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

  28 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் நாடு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதனால் லக்னோ சிறப்பு நீதிமன்றத்தை சுற்றிலும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

2 ஆயிரம் பக்க தீர்ப்பை வாசித்த நீதிபதி எஸ்.கே.யாதவ், குற்றச்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி அத்வானி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்தது லக்னோ சிறப்பு நீதிமன்றம்.


Share this:

Related posts

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்…!!!

MANIMARAN M

“சுப்ரீம் கோர்ட்ல பாத்துக்கலாம் ” நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த 7 மாநில முதல்வர்கள்

MANIMARAN M

29 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் கால் வைத்தார் பிரதமர் மோடி… மகிழ்ச்சியில் இந்துக்கள்…!!

NEWSKADAI

பூரி ஜெகநாதர் கோயிலுக்குள் நுழைந்த ‘கொரோனா’… 400 ஊழியருக்கு தொற்று உறுதியானதால் பீதி…!

NEWSKADAI

இறுதிக்கட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பு மருந்து… இந்தியாவிற்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு…!!

NEWSKADAI

பேராசை மருத்துவரின் பேயாட்டம்: 100 கொலைகள்… முதலைக்கு இரையான அப்பாவிகளின் உடல்கள்… திடுக்கிடும் தகவல்கள்…!!

AMARA