Newskadai.com
சினிமா

“பாகுபலி” இயக்குநர் ராஜமெளலிக்கு கொரோனா தொற்று உறுதி… குடும்பத்தினரையும் விட்டு வைக்காத கொடுமை…!

Share this:

இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துவரும் கொரோனா தொற்றுக்கு ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை திரைப்பிரபலங்கள் பலரும் தப்பவில்லை. சமீபத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினரான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் படிக்க:http://கொரோனாவிலிருந்து மீண்டார் விஷால்… சத்தமே இல்லாமல் எடுத்துக்கொண்ட சூப்பர் சிகிச்சை….!

கடந்த 27ம் தேதி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யாவிற்கு எடுக்கப்பட்ட இரண்டாவது கொரோனா பரிசோதனை நெகட்டீவ் என வந்ததை அடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, விஷால் மற்றும் அவரது தந்தை ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டுள்ளனர்.

மேலும் படிக்க:http://“காதலித்து பார்”… ஆண் – பெண் நேசத்தை ஆதரிக்க பெற்றோரை தடுப்பது எது?

இந்நிலையில் பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படம் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவையும் தெலுங்கு திரையுலகை நோக்கி திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ராஜமெளலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில், “சில நாட்களுக்கு முன்பு எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் இருந்தது. அதன் பின்னர் அது சரியானாலும் நாங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அதில் எங்களுக்கு தொற்று உறுதியானது. தற்போது மருத்துவர்களின் அறிவுரையின் படி நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டோம். அனைத்து வழிமுறைகளையும் முறையாக பின்பற்றி வருகிறோம். எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்ய உள்ளோம்” என பதிவிட்டுள்ளார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட திரைத்துறையினர் பலரும் ராஜமெளலி மற்றும் குடும்பத்தினர் நலம் பெற வேண்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Share this:

Related posts

அதிக சம்பளம் கேட்டு அடம்பிடித்த நயன்தாரா… அலறியடித்து ஓடிய பிரபல தயாரிப்பாளர்…!!

THAVAMANI NATARAJAN

விஜய் டி.வி. புகழ் ‘வடிவேல்’ பாலாஜி திடீர் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

NEWSKADAI

சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

நான் முஸ்லிம் என்பதால் கற்பழிப்பேன் என மிரட்டுவதா?… பிரதமரிடம் நியாயம் கேட்டு கொந்தளித்த குஷ்பு…!!

MANIMARAN M

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் தத்தளிக்கும் குடும்பத்தினர்…!!

POONKUZHALI

“எஸ்.பி.பி. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”… ரஜினி வெளியிட்ட உருக்கமான வீடியோ…!

NEWSKADAI