Newskadai.com
இந்தியா தமிழ்நாடு

“கிளாஸ் சோடோ பாகர் ஜாவ்” : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி…

Share this:

சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி க்கு ஏற்பட்ட இந்தி மொழி பிரச்சனை தமிழக அரசியலில் மொழி பிரச்சனையை கிளப்பியது. மத்திய அரசு கொண்டு வந்த மும்மொழி பாட கொள்கை தமிழக அரசியல் களத்தில் தீயை பற்ற வைத்தது. இப்பொழுது ஆயுஷ் அமைச்சக செயலாளரின் பேச்சு தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி இருக்கிறது.

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்காக நடைபெற்ற ஆன்லைன் பயிற்சியில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இயற்கை மருத்துவர்கள பலரும் கலந்து கொண்டார்கள். தமிழகத்திலிருந்தும் 37 மருத்துவர்கள் இந்த ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றனர். ஆன்லைன் வகுப்பில் ஹிந்தியில் உரையாற்றினார் ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கொடேச்சா. இந்தி மொழி புரியாத, தெரியாத, மருத்துவர்கள் அவரை ஆங்கிலத்தில் உரையாற்றும்படி கூறினர். 

ஆயுஷ் செயலர் “தனக்கு ஆங்கிலம் தெரியாது. நான் ஹிந்தி மொழி புரியவில்லை என்றால் ஆன்லைன் வகுப்பில் இருந்து வெளியேறுங்கள்.” என்று கூறிய விஷயம் தமிழக அரசியலில் புயலை கிளப்பி இருக்கிறது. கனிமொழி, ஸ்டாலின், சீமான், ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசை எதிர்த்தும், ஆயுஷ் செயலாளருக்கு எதிராகவும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். “இந்தி தெரியாதவர்களை ஆன்லைன் வகுப்பை விட்டு வெளியேற சொன்ன ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கொடேச்சா பாடம் எடுக்க தகுதியற்றவர். இதுகுறித்து மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.” என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.


Share this:

Related posts

நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு… யாரு கண்ணு பட்டுச்சோ..! முட்டிக் கொள்ளும் அதிமுக அமைச்சர்கள்

MANIMARAN M

தமிழகத்தின் 2வது தலைநகர் “மதுரை”… அதிமுக நிறைவேற்றிய தீர்மானம்…!!

MANIMARAN M

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M

ஜலகண்டாபுரம் டோட்டல் குளோஸ்: ஒரு வாரத்திற்கு இது மட்டும்தான் கிடைக்கும்!!…

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு… எவற்றுக்கெல்லாம் தளர்வுகள் அறிவிப்பு….!

NEWSKADAI

புதிய கல்விக்கொள்கை 2020 : ஆகஸ்ட் 31 வரை கருத்து தெரிவிக்கலாம் – மத்திய அரசு

MANIMARAN M