உத்தரபிரதேச மாநிலம் புரேனி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்தர் சர்மா, 1984ம் ஆண்டு முதல் அப்பகுதியில் மருத்துவமனை ஆரம்பித்த அவரால் பெரிதாக எதுவும் சம்பாதிக்க முடியாமல் போயுள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கருதிய சர்மாவின் மூளையில் பல குறுக்கு புத்தி எண்ணங்கள் உதயமாகியுள்ளன. அதிக பணம் சம்பாதிக்க அவர் தேர்வு செய்த வழியை கேள்விப்பட்டு அப்பகுதி மக்கள் கொலை நடுங்கி போயுள்ளனர்.

மேலும் படிக்க: http://டூபிஸில் உச்சகட்ட கவர்ச்சி… யாருமே பார்த்திடாத நடிகை டாப்ஸியின் ஹாட் அட்ராசிட்டி…!!
மருத்துவ தொழில் கைகொடுக்காததால், அதிகம் பணம் சம்பாதிக்கும் ஆசையுடன் எரிவாயு சிலிண்டர் தொழில் செய்துள்ளார். அதிலும் ஏமாற்றப்பட்டதால் போலி ஏஜென்சி நடத்தியுள்ளார். தனது நிறுவனத்திற்கு எரிவாயு சிலிண்டர் தேவை என்பதால் லாரிகளை கடத்தி, அதில் இருந்த டிரைவர்கள், கிளீனர்களை கொன்று உத்தரப்பிரதேச கால்வாய்களில் உள்ள முதலைகளுக்கு வீசியுள்ளார்.
இந்த வழக்கில் தண்டனை பெற்ற தேவேந்தர், வெளியே வந்த பிறகும் கொஞ்சமும் திருந்தவில்லை. டாக்சி டிரைவரகளை கடத்தி கொலை செய்ததோடு, கிட்னி திருட்டு கும்பலுடன் சேர்ந்து அதையும் செய்துள்ளார். அதாவது 1994ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை தேவேந்தர் சர்மா தனது கிளினிக்கில் பல கொலை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளார். சிகிச்சைக்காக வந்த நோயாளிகளின் கிட்னியை திருடி விற்பனை செய்ததன் மூலம் பல கோடி ரூபாய் வரை லாபம் பார்த்துள்ளார்.
மேலும் படிக்க: http://இருட்டு அறையில் முரட்டு கவர்ச்சி… “மாஸ்டர்” நாயகி மாளவிகா மோகனனின் அதிரடி…!!
இப்படி அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் முதல் மனைவியும், குழந்தைகளும் பிரிந்து சென்றுள்ளனர். 16 ஆண்டுகளாக தண்டனை பெற்ற அவர், பரோலில் வெளியே வந்து இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார். இனியாவது திருந்துவார் என பார்த்தால் மீண்டும் தனது பலே வேலைகளை ஆரம்பிக்க திட்டமிட இதையறிந்த காவல்துறையோ அவரை அலேக்காக தூக்கி கம்பி எண்ண வைத்துள்ளது.