Newskadai.com
இந்தியா

“ராமரின் வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது”… பிரதமர் மோடி பெருமிதம்…!!

Share this:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டிய பிறகு பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றினார். அதில் முக்கிய அம்சங்களைக் காணலாம்…

  • இந்துக்கள் அதிகம் வாழாத இந்தோனேஷியாவில் பல ராமாணயங்கள் பயன்பாட்டில் உள்ளன.  மிழில் உள்ள கம்பராமாணயங்கள் மட்டுமின்றி பல்வேறான மொழிகளிலும் ராமாயணம் உள்ளது. ராமர் கோவில் பூமி பூஜையில் தான் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

  • ராமர் கோவில் கட்டும் செயலானது நாட்டு மக்களை ஒன்றுபடுத்தும் வகையில் உள்ளது.  மக்கள் அனைவரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து , அமைதியான முறையில் செயல்படுவது மிகவும் பெருமைக்குரிய ஒன்று என தெரிவித்தார்.

  • ராமரின் வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது என்பது சாத்தியமாகியுள்ளது எனக்கூறிய மோடி, ஒற்றுமைக்கு ஒரு பாலமாக அயோத்தி ராமர் கோயில் அமையும் என்றும், ராமர் கோயில் கட்டவேண்டும் என்ற மக்களின் கனவு இன்று நிஜமாகியுள்ளது என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

  • ராமர் கோயிலின் மூலம் நமது கலாச்சாரத்தின் அடையாளத்தை பின்பற்றமுடியும் என்றும்,  அயோத்திக்கு இன்றிலிருந்து விடுதலை என்பதில் மகிழ்ச்சி, இன்று உலகம் முழுவதும் ராமரின் பக்தி கீதங்கள் முழுங்குகிறது என கூறினார்.

  • மகாத்மா காந்தியின் கனவில் ஒன்று ராம ராஜ்ஜியமே. ராமாயணம் கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், மலேசியா பேன்ற மொழிகளிலும் உள்ளது. ராமரை பல்வேறு மொழிகளிலும் வழிபட்டு வருகின்றனர். உலகின் கோடிக்கணக்கான மக்கள் இன்று மகிழ்ச்சியில் உள்ளனர்  என ராமரின் வரலாறு குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார்.

  • ராமர் கோவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு,  ராமர் கோவில் அமைந்த பிரதேசம் மிகவும் மேம்படும், மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகிறது அயோத்தி என தெரிவித்தார்.

  • அயோத்தில் அமைத்துள்ள ராமர் கோவில் தேசத்தை ஒன்றிணைக்கும் என்றும், அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் தியாகம் மற்றும் விடாமுயற்சியின் வெளிப்பாடே என்றும், நமது கலாச்சாரத்தின் நவீன அடையாளமாக ராமர் கோயில் அமைய உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


Share this:

Related posts

பப்ஜி உட்பட 118 ஆப்களுக்கு தடை… மத்திய அரசு அதிரடி…!!

MANIMARAN M

ஏழைகளுக்கு சோறு போட்ட 100 நாள் வேலை திட்டத்தின் தந்தை காலமானார்…!!

THAVAMANI NATARAJAN

சுயசார்பு திட்டத்தின்கீழ், 101 வகையான ராணுவத் தளவாடங்கள் இறக்குமதிக்குத் தடை… ராஜ்நாத் சிங் அறிவிப்பு..

MANIMARAN M

சிறந்த பல்கலைக்கழகமாக தேர்வு செய்யப்பட்ட “தேச விரோத பல்கலைக்கழகம்”…

MANIMARAN M

காஷ்மீர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த இந்துக்கள்… மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!

NEWSKADAI

கொரோனா பீதி: கைவிடப்பட்ட முதியவர் சடலம்… கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை… இறுதியில் அரங்கேறிய அவலம்… வீடியோ…!!

MANIMARAN M