Newskadai.com
தமிழ்நாடு

கொரோனா நேரத்தில் இதுவும் நடக்கலாம்… மக்களை உஷார் படுத்திய காவல்துறை…!

Share this:

கொரோனா பெருந்தொற்றினால் உலகே முடங்கி இருக்கும் நிலையில், பெரும்பாலான மக்கள் பொருளாதாரத்திலும், வாழ்வாதரத்திலும் மிகப் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இச்சூழலில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வாய்புள்ளதாக சென்னை பெருநகரக் காவல்துறையின் எம்.கே.பி.நகர் சரக உதவி ஆணையர் ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.

Police

மேலும், வேலையின்மை, வருவாய் இழப்பு, பணப்புழக்கம் குறைவு போன்ற காரணங்களால் பழைய குற்றவாளிகள் அல்லது புதிதாக உருவாகும் புது குற்றவாளிகளால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கக் கூடும், எனவே பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேணும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

  1. மொபைல் போன்களை பொது வெளியில் அதிகம் பயன்படுத்தவதை குறைக்க வேண்டும்.
  2. தேவைக்கு அதிகமான பணத்தை கையில் எடுத்துச் செல்லக் கூடாது.
  3. விலையுயர்ந்த நகைகளை அணிந்து பொது வெளியில் நடமாடக் கூடாது.
  4. வாகனங்களில் முன் பின் தெரியாதவர்களுக்கு லிப்ட் கொடுக்கக் கூடாது.
  5. பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
  6. பள்ளி, கல்லூரி முடிந்ததும் குழந்தைகளை விரைவில் வீடு திரும்ப அறிவுறுத்த வேண்டும்.
  7. குழந்தைகள் கல்வி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டியிருப்பின் பெரியவர்கள் துணைக் கொண்டு செல்ல வேண்டும்.
  8. வேலைக்கு செல்லும் ஆண்களும் பெண்களும் அதிக விழிப்புடனும் இருக்க வேண்டும்.
  9. எங்கு சென்று வீடு திரும்பினாலும் பிரதான சாலையையே பயன்படுத்த வேண்டும். ஆள் அரவமற்ற தெருக்களிலோ, குறுக்கு வழிகளிலோ முயற்சிக்கக் கூடாது.
  10. வீட்டின் வெளிப்புற வாயிலை பூட்டி வைக்கவேண்டும்.
  11. பாதுகாப்பிற்காக பொது வெளியில் மக்களிடையே அதிக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
  12. வெளியில் இருக்கும் பொழுது நம்மை சுற்றி நடப்பவைகளில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
  13. வெளியில் இருக்கும்பொழுது வீட்டிற்கு போன் செய்து குடும்பத்தார்களின் நலனை சரிபார்க்க வேண்டும்.
  14. பர்சுகள், கிரெடிட், டெபிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
  15. பொது போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
  16. தனியார் வாகன சேவைகளை பயன்படுத்துவோர் உங்கள் பயண விவரங்களை பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
  17. கூட்ட நெரிசலைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  18. தினசரி நடைப்பயிற்சி செய்வோர் காலை 6.00 மணிக்கு பிறகு மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
  19. இரவு 8.00 மணிக்குள் பிரதான சாலைகளைப் பயன்படுத்த வேண்டும். இரவில் சீக்கிரம் வீடு திரும்ப முயற்சி செய்யவேண்டும்.
  20. எந்நேரமும் கையில் அவசர எண்ணை வைத்திருக்க வேண்டும்.

என்று பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.


Share this:

Related posts

“இனி மணல் கடத்தல் வழக்கில் சிக்கினால்”… அதிரடி உத்தரவை பிறப்பித்து அதிரவைத்த உயர் நீதிமன்றம்…!!

THAVAMANI NATARAJAN

அடுத்த லெபனானாய் மாறப்போகும் சென்னை… அரசுக்கு அபாய எச்சரிக்கை கொடுத்த ராமதாஸ்…!!

MANIMARAN M

கறி விருந்து: ஜலகையில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி?

NEWSKADAI

முதல்வர் தொகுதியில் தலைவிரித்தாடும் கொரோனா… கிடா விருந்தில் பங்கேற்ற 150 பேருக்கு தொற்று??

THAVAMANI NATARAJAN

ரூ.25 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் – ஏன் தெரியுமா..?

MANIMARAN M

“சதுரங்க வேட்டை” பட பாணியில் நடந்த மோசடி… ரூ.60 கோடி அம்பேல்…!!

MANIMARAN M