Newskadai.com
தமிழ்நாடு

அடிமடியிலேயே கைவைத்த ‘கொரோனா’… அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாட்களுக்கு மூடல்…!!

Share this:

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் என பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அவிநாசி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட அவலம் கோவைவாசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அவிநாசி அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள், 30 செவிலியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு கொரோனா பரிசோதனை மையம் இருப்பதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர், 3 செவிலியர்கள், ஆய்வக பணியாளர், மருத்துவமனை ஊழியர் என ஒரே நாளில் மொத்தம் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

இங்குள்ள அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே அவிநாசி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பலரும் சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதால் அங்கு நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

செப்.17ல் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு… அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு…!!

MANIMARAN M

ஸ்கூல் இருக்கு…. ஆனா இல்ல… மாணவர்களை குஷி படுத்திய அறிவிப்பு

MANIMARAN M

4 மணி நேரத்திற்கும் மேலாக திணற திணற விசாரணை… எஸ்.வி.சேகரை வச்சி செய்யும் காவல்துறை…!!

NEWSKADAI

6 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப்போகும் மழை… கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

AMARA

இரவில் நடந்த கொடூரம் : கோவை மாநகரில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் பலி..!!

MANIMARAN M

இந்திய ரேஷன் கடைகளில் முதன்முறையாக… தமிழகத்தில் வருகிறது… மொபைல் ரேஷன் ஷாப்…

MANIMARAN M