Newskadai.com
தமிழ்நாடு

சேலத்தில் அரங்கேறிய கொடூரம்… உயிருடன் முதியவரை ‘ப்ரீசர் பாக்ஸில்’ அடைத்து வைத்த அவலம்…!

Attempted murder
Share this:

உடல் நலம் பாதிக்கப்பட்டவரை உயிரோடு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அவரது சாவை எதிர்ப்பார்த்து விடிய விடிய காவல் காத்த தம்பியால் சேலம்வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  சேலம் கந்தம்பட்டி பழைய ஹவுசிங் போர்ட் பகுதியில் வசிப்பவர் சரவணன் வயது 70, இவரது அண்ணன் பாலசுப்பரமணிய குமார் வயது 74, இவர் சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

Attempted murder மேலும் படிக்க:http://மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்ட கொரோனா… இன்றைய நிலை..!!

இந்த நிலையில் அண்ணன் இறந்து விட்டதாக கூறி குளிர்சாதனப்பெட்டி வேண்டும் என தகவல் கொடுத்துள்ளார். இதனால் குளிர்சாதனப்பெட்டி பணியாளர்கள் சரவணன் வீட்டிற்கு பெட்டியை கொடுத்து விட்டு பிற்பகல் வருவதாக கூறிச் சென்றுள்ளனர். அதன்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் குளிர்சாதன பெட்டியை திரும்ப எடுக்க வந்த பணியாளர்கள் குளிர்சாதனப் பெட்டிக்குள் முதியவர் உயிரோடு துடித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Attempted murder உயிரோடு இருப்பவரை ஏன் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துள்ளீர்கள் என கேட்டதற்கு அவரது ஆன்மா இன்னும் அவரது உடலை விட்டு செல்லவில்லை, அதனால் தான் அவரது உடலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தோம். இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவார் என பதிலளித்துள்ளார்.  இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த முதியவரை 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

அரிய வாய்ப்பு…. தமிழக அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க “கூடுதல் கால அவகாசம்”…!

NEWSKADAI

ம.பி முதல்வர் போல அதிரடி காட்டுங்க… எடப்பாடியாரை உசுப்பேத்தும் ராமதாஸ்…

MANIMARAN M

ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

அக். 5 க்குள் சத்துணவு மைய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்…

MANIMARAN M

இறுதி செமஸ்டர் தேர்வு தேதிகளை அறிவித்தது பல்கலைக்கழகம்…!!

AMARA

தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு??…. விரைவில் முதல்வர் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு…!!

AMARA