Newskadai.com
சினிமா

இது வேற லெவல் வெறித்தனமால்ல இருக்கு… மதுரை சிம்பு ரசிகர்களின் தெறி மாஸ் போஸ்டர்…!

Simbu
Share this:

கால்ஷீட் பஞ்சாயத்துக்களுக்கு பிறகு நடிகர் சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க ஆரம்பித்தார். பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க உள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படப்பிடிப்பு தொடங்கிய வேகத்திலேயே கொரோனா பிரச்சனை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

 

Simbu

நீண்ட நாட்களாக ஷூட்டிங்கில் பங்கேற்காததால் சிம்பு சுமார் 100 கிலோ வரை எடை கூடிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. லாக்டவுன் நேரத்தில் உடல் எடையை குறைக்க திட்டமிட்ட சிம்பு, தினந்தினம் கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களும் வெளியாகி தாறுமாறு வைரலாகின. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சிம்பு கடுமையான உடற்பயிற்சிகள் மூலமாக 21 கிலோ வரை உடல் எடையை குறைத்ததாக தெரிவித்தார்.

இதனால் சிம்புவின் நியூ லுக்கை பார்க்க வேண்டுமென அவருடைய ரசிகர்கள் ஏங்கி வந்தனர். இந்நிலையில் மதுரை சிட்டி STR வெறியர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது. அதில் உங்களுடைய லேட்டஸ்ட் போட்டோவை வெளியிடுங்கள் ப்ளீஸ் என்ற வாசகத்துடன் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வெங்கட் பிரபு, சிம்புவின் நண்பர்கலான மகத், விடிவி கணேசன் ஆகியோரது போட்டோவையும் போஸ்டரில் அச்சிட்டு அசத்தியுள்ளனர். a


Share this:

Related posts

திரும்பி வருவாரா எஸ்.பி.பி?… கண்ணீர் மல்க பேட்டியளித்த இயக்குநர் பாரதிராஜா…!

NEWSKADAI

ஷாலினியுடன் கருப்பு மாஸ்க் அணிந்த படி அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்ட அஜித்… வைரல் வீடியோ…!!

NEWSKADAI

“10 லட்சம் குடும்பத்தை காப்பாத்துங்க”… முதல்வரிடம் கோரிக்கை வைத்த தியேட்டர் உரிமையாளர்கள்…!!

NEWSKADAI

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி… தனியார் மருத்துவமனையில் அனுமதி… வைரல் வீடியோ…!!

AMARA

“பிஎம் நரேந்திர மோடி” – அக்டோபர் 15-ல் செகண்ட் ரிலீஸ்

MANIMARAN M

சொன்னதை செய்து காட்டிய சூர்யா… “சூரரைப் போற்று” ரூ.5 கோடியிலிருந்து சினிமாத்துறைக்கு முதற்கட்ட நிதியுதவி…!!

AMARA