Newskadai.com
தமிழ்நாடு

5 மாதத்திற்கு பிறகு பேருந்து பயணம்… பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய  பேருந்து சேவை…!!

BUS
Share this:

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிருந்ததை அடுத்து பேருந்துகள் இயங்குவதும் தடைசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து போருந்துகளை இயக்குவதற்கு தடைவிதித்திருந்து தற்போது தமிழக அரசு குறிப்பிட்ட தளர்வுகளை அளித்து வருகிறது அதன் அடிப்படையில் தற்போது தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளை அந்தந்த மாவட்டங்களில் இயக்க அனுமதி அளித்துள்ளது.
BUS
தமிழகத்தில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது இதனை தொடர்ந்து ஓட்டுநனர்கள், நடத்துனர்கள், மற்றும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் தனியார் பேருந்துகளை இயக்கப்டமாட்டாது என திட்டவட்டமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
BUS
அதன் அடிப்படையில் பேருந்துகளில் 50 சதவீதம் மட்டும் இருக்கையில் அமர்ந்து பயணிக்க வேண்டும். பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் முகக் கவசம் கட்டாயம். ஓட்டுநர், நடத்துநர்கள் அவசியம் கை உறை அணிந்திருக்க வேண்டும். பேருந்தில் ஏறும் போது அங்கு வைக்கப்பட்டுள்ள கிருமி  நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். பேருந்தில் பின்புறம் ஏறி முன்புறம் இறங்க வேண்டும். மேலும் பேருந்துகளையும், பேருந்து நிறுத்தங்களையும் நாள்தோறும் இருமுறை தூய்மைப்படுத்த வேண்டும் எக்கச்சக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
BUS
இதை அடுத்து சென்னையில் 3200 மாநகர பேருந்து உட்பட தமிழகம் முழுவதும் 19,500 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர், ஓரிக்கை ஆகிய இடங்களில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளில் கிருமி நாசினிகள் தெளித்து தூய்மைபடுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தனிமனித இடைவெளியுடன் அமர இறுக்கைள் தயார் செய்யப்பட்டு வருகிறது. 5 மாதங்களுக்கு பிறகு பேருந்துகள் இயங்குவதால் பயனிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

Share this:

Related posts

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

MANIMARAN M

தனியார் பள்ளிகளுக்கு வருகிறது ஆப்பு…. ஆசிரியர்களின் சம்பள விவகாரத்தில் தலையிடுவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க ஆணை…!

MANIMARAN M

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு ஹால்டிக்கெட் தயார்… நாளை மறுதினம் பதிவிறக்கம் செய்யலாம்…!!

THAVAMANI NATARAJAN

கோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் ஆகாமல் தணியாது வேகம்…!!

THAVAMANI NATARAJAN

ஜலகையில் கொரோனா பீதியில் முதியவர் உயிரிழப்பு… அதிர்ச்சியில் மக்கள்…!!

NEWSKADAI

ஜலகையை வச்சு செய்யும் கொரோனா: தொற்றால் அடுத்தடுத்து 10 பேர் பலி!?..

POONKUZHALI