Newskadai.com
தமிழ்நாடு

கந்து வட்டி கொடுமை: சேலத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி…!!

Fire
Share this:

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை அடுத்துள்ள திப்பம்பட்டியை சேர்ந்த விவசாயி சுந்தரம் (40 ) சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க மனைவி மைதிலி மற்றும் 11 வயது மகனுடன் வந்துள்ளார். அப்போது தான் கொண்டு வந்த பையிலிருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தானும் தன் குடும்பத்தினரும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இதை கண்டதும் மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்து தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

salem Fire

இதைதொடர்ந்து விவசாயி சுந்தரத்திடம் விசாரித்த போது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திப்பம்பட்டியை சேர்ந்த கிராம நிர்வாகியின் உதவியாளர் கோவிந்தன் என்பவரிடம் 16 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதனை வட்டியுடன் சேர்த்து இதுவரை 18 லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வட்டியுடன் சேர்த்து இன்னும் 21 லட்சம் ரூபாய்  செலுத்த வேண்டியுள்ளதாக கோவிந்தன் மிரட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சல் காரணமாக தீக்குளிக்க முயன்றதாக கூறியுள்ளார். கூடுதல் வட்டி கேட்கும் கோவிந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளார். இதைதொடர்ந்து மூவரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

“தலைமையேற்க வா”… மதுரையை தாண்டி கோவை வரை வீசும் அழகிரி அலை… பீதியில் திமுக…!!

MANIMARAN M

பேருந்து நிலையத்தில் பட்ட பகலில் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டிக் கொண்ட ஓட்டுனர்கள்… திருச்சியில் நடந்தேறிய விபரீதம்…

MANIMARAN M

நிலத்தை அளக்க லேட்டான இதுதான் நடக்கும்… அதிகாரிகளுக்கு அடுத்த ஆப்பு…!!

THAVAMANI NATARAJAN

டாஸ்மாக்கால் கொரோனா தொற்று? 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…

MANIMARAN M

“மகனின் மருத்துவ செலவிற்கு பணமில்லை”… வறுமையிலும் நேர்மையை விட்டுக்கொடுக்காத ஆட்டோ ஓட்டுநர்…!

MANIMARAN M

ஒருவேளை உணவுக்கூட கிடைக்காமல் அல்லாடும் கொரோனா நோயாளிகள்…. சீர்காழி அரசு மருத்துவமனையின் அவலம்…!!

MANIMARAN M