Newskadai.com
தமிழ்நாடு

அடித்து சொல்லும் அண்ணா யூனிவர்சிட்டி… அரசின் ஊசல் ஆட்டத்தால் தவிக்கும் மாணவர்கள்…!!

Anna University
Share this:

கொரோனா பரவரலை தடுக்கும் நோக்கத்தில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் தேர்வுகளை நடத்த முடியாமல் போனது. இதனால் கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளிலும் அரியர் வைத்திருந்தவர்கள் உட்பட தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.
Anna University
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவை ஏற்க முடியாது என ஏ.ஐ.சி.டி.இ. கடிதம் அனுப்பியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். ஆனால் அதுபோன்ற கடிதம் அரசுக்கு வரவில்லை என உயர்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுப்பியதாக இன்று இ-மெயில் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது என்றும் அவ்வாறு உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த இ-மெயில் போலியானதாக இருக்கலாம் என்றும் தகவல் பரவி வருகிறது.
Jayakumar
இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஏ.ஐ.சி.டி.இ கடிதத்தின் நம்பகத்தன்மையில் சந்தேகம் உள்ளது என்று தெரிவித்தார். அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது அரசின் உறுதியான முடிவு இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அரியர் சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அரசாணை வெளியிட முடியவில்லை. அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் அரசு சொல்வதும் அமைச்சர் சொல்வதும் மட்டுமே உண்மை  நிலவரம். இது தொடர்பான எந்த விதமான இ-மெயிலும் வரவில்லை என்றவாறு தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு பதிலளிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீண்டும் விளக்கமளித்துள்ளார். ஏ.ஐ.சி.டி.இ. யிடம் இருந்து கடந்த 30-ம் தேதியே கடிதம் வந்ததாகவும் அன்றைய தினமே உயர்கல்வித் துறைக்கு அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்தார். அமைச்சரின் மறுப்புக்குப் பின்னர் மீண்டும் 2 வது  முறை கடிதம் அனுப்பட்டதாகவும் சூரப்பா தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்திடம் இருந்து தங்களுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை என மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர்  அன்பழகன் மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோரின் வேறுபட்ட கருத்துகளால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்ப்படும் என  கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அண்ணா பல்பலைக்கழகமும், தமிழக அரசும் ஒன்றினைந்து ஒருமித்த முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என  கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this:

Related posts

நீட் தேர்வு அச்சம்: கோவையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை… முடிவின்றி தொடரும் சோகம்…!!

MANIMARAN M

ஆலங்குடியில் 24, 25,26 தேதிகளில் முழு ஊரடங்கு… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

AMARA

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா… பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்…

MANIMARAN M

ஹிந்தி மட்டுதான் அரசின் அலுவல் மொழியா?? காவிரி உரிமை மீட்புக் குழு கண்டனம்…

MANIMARAN M

சென்னையில் கட்டுக்குள் வரும் கொரோனா… அமைச்சர்கள் குழு திடீர் ஆலோசனை…!!

AMARA

சேலத்தை அடித்து நொறுக்கிய பேய் மழை… வீடுகளை சூழ்ந்த வெள்ள நீரால் மக்கள் அவதி…!!

THAVAMANI NATARAJAN