Newskadai.com
தமிழ்நாடு

சேலத்தில் சத்துணவு பணியாளர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்… ஆட்சியர் உத்தரவுடன் விவரம் உள்ளே…!

Salem Collector
Share this:

சேலம் மாவட்டத்தில் அணைத்து ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சிகளுக்குட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் அளிக்கலாம் என கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார். அமைப்பாளர் வேலைக்கு 451 இடங்களும், சமையலர்கள் வேலைக்கு 138 இடங்களும், சமையல் உதவியாளர் வேலைக்கு 981 இடங்களும் காலியாக உள்ளது.

தகுதி முறை:

பெண்கள் மட்டும் விண்ணப்பபிக்கலாம், சத்துணவு மைய அமைப்பாளர் வேலைக்கு கல்வித்தகுதியாக பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எஸ்.எஸ்.எல்.சி தேர்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினருக்கு 8 ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 21வயதிற்குள் 40 வயதுக்கு மிகாதவராகவும் , பழங்குடியினருக்கு 18 வயதிற்குள் 40 வயதுக்கு மிகாதாவராகவும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 43 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்Schoolஉரிய சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும், மாநகராட்சி அலுவலகங்களில் வருகின்ற 30 ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ, அல்லது பதிவு தபால் மூலமாகவோ சமர்பிக்கவேண்டும். 30 ம் தேதிக்கு மேல் காலதாமதாமாக தபால் மூலம் மற்றும் நேரடியாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்மாட்டாது.

School

விண்ணப்பங்களை ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம், அல்லது https://salem.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் சான்றிதழின் நகல் மட்டும் இணைக்க வேண்டும், நேர்முக தேர்வின் போது அசல் சான்றிதழ்களை காண்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், கல்வித்தகுதிச் சான்று நகல், மதிப்பெண் சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்று, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களாக இருப்பின் உரிய அலுவலரிடமிருந்து பெறபட்ட சான்றிதழ்களின் நகல்கள், மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் அதற்கான சான்றிதலின் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். மேலும் தகவலுக்கு மேற் குறிப்பிட்ட இணையதளத்தை பயன்படுத்தவும்.


Share this:

Related posts

தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு??…. விரைவில் முதல்வர் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு…!!

AMARA

சுனாமி அறிகுறியா?… இரு தினங்களாக கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதி…!!

MANIMARAN M

தீராத வயிற்று வலி… 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை…!

THAVAMANI NATARAJAN

பலி எண்ணிக்கையில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா… கட்டுப்படுத்த முடியாமல் திணறும் தமிழகம்..!!

NEWSKADAI

நாகை தொழிலாளியின் அசத்தல் கண்டுபிடிப்பு… ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி…!!

MANIMARAN M

“அப்பா அப்பா வேணாம் பா”… திருநங்கையின் வளர்ப்பு மகனை துன்புறுத்திய கொடூரன்..!

THAVAMANI NATARAJAN