Newskadai.com
தமிழ்நாடு

அக். 5 க்குள் சத்துணவு மைய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்…

Share this:

மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள 358 அமைப்பாளர்கள், 71 சமையலர்கள், 559 சமையல் உதவியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு வரும் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவித்துள்ளது.

சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர்த்து, ஏனைய பள்ளிகளில் உள்ள அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும் என்றும், இதற்கான விண்ணப்படிவங்களை தொடர்புடைய ஊராட்சி ஒன்றியம், மதுரை மாநகராட்சி மற்றும் திருமங்கலம் நகராட்சி அலுவலங்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களை மதுரை மாவட்ட இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 05.10.2020 க்குள் தொடர்புடைய அலுவலங்களில் நேரடியாக கொடுத்து ஒப்புதல் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விவரங்கள் ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி மற்றும் திருமங்கலம் நகராட்சி அலுவலங்களின் விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

“சுங்க கட்டணம் கிடையாது”… ஊழியர்களின் போராட்டத்தால் குஷியான வாகன ஓட்டிகள்…!

THAVAMANI NATARAJAN

அண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா?

MANIMARAN M

“8 முறை கோரிக்கை வைத்தும் எதுவும் கண்டுக்கல”…. போராட்டத்தில் குதித்த அரசின் முக்கிய துறை…!

THAVAMANI NATARAJAN

நாளை முதல் ரேசன் கடைகளில் இதுவும் இலவசம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

NEWSKADAI

ரத்து செய்யப்பட்டது ஏலம் : செத்து மிதந்தது மீன்கள் – நாகூரில் பரபரப்பு…

MANIMARAN M

சல்யூட்: ஜனாதிபதி விருது பெரும் தமிழக காவல்துறை

MANIMARAN M