Newskadai.com
தமிழ்நாடு

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம்…!

RTE Admission
Share this:

கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 25- ந் தேதி வரை 2020-21-ம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டு தனியார் பள்ளிகளில் முதற்கட்ட சேர்க்கை நடத்தப்பட்டது.

RTE Admission

மேலும் படிக்க http://காலையில் காங்கிரஸில் இருந்து விலகல்…. பிற்பகலில் பாஜகவில் இணைவு… குஷ்பு அதிரடி…!

அதில் இதுவரை நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்களுக்கு 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்காக இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்திலுள்ள சிறுபான்மையற்ற, தனியார் சுயநிதி பள்ளிகளில், எது நுழைவு நிலையோ (எல்.கே.ஜி. அல்லது முதல் வகுப்பு) அந்த வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

RTE Admission

மேலும் படிக்க http://“கொரோனா” பிடியில் 24 மாணவர்கள்… அரசை மதிக்காத ஆரம்ப பள்ளியால் நேர்ந்த சோகம்…!!!

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், பிறப்பு சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று (ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்திற்கும் கீழ் உள்ளோர்), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் முன்னுரிமை கோரும் நபர்கள் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட நிரந்தர ஆவணங்களின் நகல், சாதி சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


Share this:

Related posts

“வடிவேல் பாணியில் வாத்தியார்களைக் கலாய்த்த மாணவன்”… சமூக வலைதளங்களில் வைரலாகும் போஸ்டர்…

MANIMARAN M

தாரமங்கலத்தில் பைக் ஓட்டி பழகும்போது பரிதாப விபத்து… பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்…

THAVAMANI NATARAJAN

#CORONAVIRUS : ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுதான் பாதிப்பு, பலி எண்ணிக்கை நிலை..!!

NEWSKADAI

மக்களே உஷார்: இந்த 5 மாவட்டங்களை அடித்து நொறுக்கப்போகிறது கனமழை…!!

THAVAMANI NATARAJAN

அடாவடி கடன் வசூல்: தனியார் வங்கியின் செயலால் தொழிலாளி பேங்க் வாசலிலேயே தீக்குளிப்பு…!!

MANIMARAN M

செப்.7 முதல் ரயில், பேருந்து சேவைக்கு அனுமதி… முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு…!!

AMARA