Newskadai.com
இந்தியா

சிறந்த பல்கலைக்கழகமாக தேர்வு செய்யப்பட்ட “தேச விரோத பல்கலைக்கழகம்”…

Share this:

2019-20-ஆம் ஆண்டுக்கான மத்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பிடித்து சிறந்த பல்கலைக்கழகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பாடத்திட்டங்களில் ஆண்டுதோறும் சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, மாணவியரின் விகிதம், பாலின சமத்துவம், பிற மாநிலம் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுடனான இணக்கம், மாணவ மாணவியரின் பன்முகத்தன்மை, மற்றும் ஆசிரியர்களின் தரம் என பல அளவுகோலின் அடிப்படையில் தரவரிசை வழங்கப்படுகின்றது. இதில் அனைத்திலும் முன்னிலைப் பெற்று ஜாமியா மில்லியா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு, டிசம்பர் மாதத்தில், மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி வழி போராட்டத்தை முன்னெடுத்தனர். இப்போராட்டம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த சூழலில், டிசம்பர் 15, 2019 அன்று, டில்லி காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசினர், மேலும் நூலகத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்தனர். ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் தீவிரவாதிகளை உருவாக்கி தேசவிரோதச் செயல் புரிந்துக் கொண்டிருக்கிறது என்று மத்திய ஆட்சியாளர்களே பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், தேச விரோதி என முத்திரை குத்தப்பட்ட ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் 90 சதவிகித மதிப்பெண்களுடன் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து நாட்டில் சிறந்த பல்கலைக்கழகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 83 சதவிகித மதிப்பெண்களுடன் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தையும், 82 சதவிகித மதிப்பெண்களுடன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும், 78 சதவிகித மதிப்பெண்களுடன் உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன.


Share this:

Related posts

“பி.எஸ்.என்.எல். நாட்டிற்கே ஒரு களங்கம்; தேசதுரோகிகளின் கூடாரம் விரைவில் காலியாகும்”… கொளுத்தி போட்ட பாஜக எம்.பி…!

THAVAMANI NATARAJAN

சரக்கில் சானிடைசர் கலந்தடித்த 10 ‘குடி’மகன்கள் பலி…. ஆந்திராவில் அரங்கேறிய பரிதாபம்…!!

NEWSKADAI

29 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் கால் வைத்தார் பிரதமர் மோடி… மகிழ்ச்சியில் இந்துக்கள்…!!

NEWSKADAI

அயோத்தி வழக்கில் அதிரடி தீர்ப்பு: நீதிபதி ரஞ்சன் கோகோய்யை முதல்வராக்கி அழகு பார்க்க போகும் பாஜக…!!

MANIMARAN M

புதிதாக 15 மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M

யோகி இமேஜை டேமேஜ் செய்த பாஜக எம்.எல்.ஏ… ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆளும் கட்சிக்காரரே குற்றச்சாட்டு….!

NEWSKADAI