Newskadai.com
தமிழ்நாடு

சேலத்துக்கு வந்தாச்சு அதி நவீன கண்காணிப்பு கேமரா… இனி ஹெல்மெட் போடாம ‘எஸ்’ ஆக முடியாது…!

ANPR camera
Share this:

சேலம் மாவட்டத்தில் ANPR என்ற அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. சென்னை போன்ற பெரும் நகரங்களில் ANPR (Automatic Number Plate Recognition) கேமராவை அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கேமராவின் சிறப்பம்சம் என்னவென்றால் வாகனங்கள் எவ்வளவு வேகமாக சென்றாலும் மிக துல்லியமாக பதிவு செய்யும். வாகனங்களின் பல வடிவ எண் ஸ்டைல்களையும் எளிதாக படமெடுக்கும் வசதியை கொண்டுள்ளது.

ANPR cameraமேலும் படிக்க: http://தொடர்ந்து குறையும் தங்கம் விலை… இது வாங்க வேண்டிய நேரம்..!!

மேலும் வாகனம் சாலையைக் கடக்கும் நேரம், இடம் என அனைத்தும் உடனடியாக சேமிக்கப்படுகின்றன. இதனால் காணாமல் போகும் வாகனங்களின் விவரங்களை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தால் எளிதாக வாகனங்களை கண்டுபிடித்துவிடலாம். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்பவர்களையும் எளிதில் பிடித்துவிடலாம். இந்த வகை கேமராவின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இரவு நேரங்களிலும் மிகத் தெளிவாக பதிவுசெய்யும் திறனை கொண்டுள்ளது.

ANPR cameraஹெல்மெட் அணியாமல் செல்லும் அனைத்து வகானங்களின் நம்பர் பிளேட்-யை ஆட்டோமேட்டிக்காக புகைப்படம் எடுக்கப்பட்டுகிறது. இதன் மூலம் ஹெல்மட் அணியாதவர்களின் எண்களின் முகவரிக்கு ஆன்லைன் ஃபைன் சலான் அனுப்படுகிறது. இதனால் காவல் துறையினர் இல்லை என்றாலும் ஹெல்மெட் அணியாதவர்கள் இந்த கேமராவின் மூலம் மாட்டிக்கொள்வார்கள். எனவே சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும் ஹெல்மட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


Share this:

Related posts

12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை…!

THAVAMANI NATARAJAN

அடேங்கப்பா…. ஒரே நாளில் சென்னையில் கொட்டித்தீர்த்த மழை அளவு இவ்வளவா?

AMARA

பள்ளி மாணவர்களுக்கு நல்ல செய்தி… விலையில்லா புத்தகங்கள் கொடுக்கும் பணி தொடங்கியாச்சு…!!

THAVAMANI NATARAJAN

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு ஹால்டிக்கெட் தயார்… நாளை மறுதினம் பதிவிறக்கம் செய்யலாம்…!!

THAVAMANI NATARAJAN

பக்தர்களுக்கு நல்ல செய்தி: இன்று கோயில்கள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை தெரிஞ்சிக்கிட்டு போங்க…!!

THAVAMANI NATARAJAN

இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டி… ரத்த வெள்ளத்தில் துடித்தவர் மருத்துவமனையில் அனுமதி….!!

NEWSKADAI