Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது தொடரும் பாலியல் புகார் – மற்றொரு ஆசிரியர் கைது…!

Share this:

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பிஎஸ்பிபி பள்ளியின் கராத்தே மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது கராத்தே மாஸ்டர் கைதாகி இருப்பது பிஎஸ்பிபி பள்ளியின் மீது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள கேகே நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக மே மாதம் 27ம் தேதி கைது செய்யப்பட்டார். பள்ளியில் வேறு சில ஆசிரியர்களும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக விசாரணையின் போது ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

ராஜகோபாலன் மீதான புகார் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்க பிரத்யேக தொலைப்பேசி எண்ணை குற்றவியல் தடுப்பு பிரிவு போலீசார் அறிவித்தனர். புகார் அளிக்கும் மாணவிகளின் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புகார் அளிப்பதற்காக அறிவிக்கப்பட்ட 94447 72222 என்ற எண்ணை தொடர்பு கொண்ட பிஎஸ்பிபி பள்ளியில் படிக்கும் இரு மாணவிகள் அதே பள்ளியில் கராத்தே பயிற்சி அளித்து வந்த கெவின்ராஜ் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதேபோன்று வேறுஒரு பெண்ணும் கெவின் ராஜ் மீது புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த கெவின் ராஜ் மற்றும் அவரது இரு நண்பர்களையும் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நாளுக்கு நாள் ஆசிரியர்கள் மீது மாணவிகள் அளித்து வரும் பாலியல் புகார்கள் பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.


Share this:

Related posts

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா… பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்…

MANIMARAN M

நாளை மறுநாள் +1 தேர்வு முடிவுகள் வெளியீடு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!

NEWSKADAI

பிரபல ரவுடி என்கவுண்டர்… பரபரப்பில் சென்னை…

MANIMARAN M

கொரோனாவுக்கு பலியானார் காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார்… சோகத்தில் மூழ்கியது காங்கிரஸ்…!!

NEWSKADAI

‘நீ கிறுக்குத்தனமா கேள்வி கேட்டால்’… லஞ்சம் குறித்த கேள்வியால் கடுப்பான வேளாண் துறை அமைச்சர்…!

AMARA

+2 பொதுத்தேர்வு ரத்தா?… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசிக்கப்படும் விவகாரங்கள் என்ன?

AMARA