Newskadai.com
தமிழ்நாடு

ஒரே நாளில் 2வது நீட் தேர்வு மரணம்: தருமபுரி மாணவன் ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை…!!

Share this:

கொரோனா பெரும் தொற்றையும் பொருட்படுத்தாமல் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதால் இந்த ஆண்டு நீட் தேர்வை கட்டாயம் ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இருப்பினும் மாணவர்களின் நலனை விட கல்வி கொள்கையே முக்கியம் என முடிவு செய்த மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி உத்தரவிட்டது.

vignesh

 

நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் தமிழக மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு தயாராகி வந்த கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர் ரவிச்சந்திரனின் மகள் சுபஸ்ரீ கடந்த 19ம் தேதி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த சோகத்தின் வடுக்கள் மறைவதற்குள் அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், தற்போது 3வது முறையாக தேர்வை எழுத பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். டாக்டர் பட்டம் என்ற கனவை நோக்கி ஓடும் இளம் பிஞ்சுகள், எங்கே தமது கடும் முயற்சிகள் அனைத்தும் கானல் நீரை மாறிவிடுமோ? என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த முருகசுந்தரம் என்ற காவல்துறை எஸ்.ஐ.யின் மகள் ஜோதி துர்கா(19). நீட் தேர்வுக்காக தயாராகி வந்த இவர், மன உளைச்சல் காரனமாக இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக மாணவி எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் படிப்போரையும், பார்ப்போரையும் கனத்த சோகத்தில் மூழ்கடிக்கிறது.

Adithiya

மாணவி ஜோதி துர்காவின் மரணத்தை அடுத்து, நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கம் தமிழகத்தில் மீண்டும் வலுவாக முழங்க தொடங்கியுள்ளது. இந்த சமயத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாளை தனது சொந்த ஊரில் நீட் தேர்வு எழுத தயாராகி வந்த நிலையில், தேர்வு பயம் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இன்று ஒரே நாளில் இரண்டு மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி என்கவுன்டர்… பதட்டத்தில் தூத்துக்குடி…

MANIMARAN M

நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது… தமிழக அரசின் உத்தரவால் பஸ் உரிமையாளர் அதிருப்தி…!

AMARA

பதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

MANIMARAN M

போராட்டத்தை தடுக்க வந்த போலீசாருக்கு கொரோனா… மரண பீதியில் ஊத்தங்கரை மக்கள்…!!

NEWSKADAI

விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள் : வெளிச்சத்திற்கு வந்த 110 கோடி ரூபாய் முறைகேடுகள்…

MANIMARAN M

நீட் தேர்வால் தருமபுரி மாணவன் தற்கொலை… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்…!!

AMARA