அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டுற்கான பொறியியல் படிபிற்கு சேர்க்கை விண்ணப்பம் www.tneaonline.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிந்தது. இதுவரை 1.48 லட்சத்திக்கு மேலான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் இதில் 1.38 லட்சம் மாணவர்கள் தங்களின் விண்ணப்பத்திற்கான கட்டனத்தை செலுத்தி விண்ணப்பித்துள்ளார்கள். விண்ணப்பித்த மாணவர்களுக்கு சான்றிதல் பதிவேற்றம் செய்ய ஜூலை 31ம் தேதி முதல் துவங்கியது பதிவேற்றம் செய்ய கால அவகாசம் முடிவடைந்த நிலையில் 1.4 லட்சம் மாணவர்கள் மட்டுமே சான்றிதல்கள் பதிவேற்றம் செய்துள்ளனர்.
அதற்கான கால அவகாசம் இன்று ஆகஸ்ட் 20 நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுள்ளது. இதுவரை சான்றிதல் பதிவேற்றம் செய்யாத மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்ள அண்ணா பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது. செப்டம்பர் 10 தேதி முதல் அக்டோபர் 6 தேதி வரை இதற்க்கான கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு 044-22351014, 22351015 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.