Newskadai.com
இந்தியா

சரக்கில் சானிடைசர் கலந்தடித்த 10 ‘குடி’மகன்கள் பலி…. ஆந்திராவில் அரங்கேறிய பரிதாபம்…!!

Share this:

லாக்டவுன் நேரத்தில் சாப்பாட்டிற்கு வழியின்றியும், வேலை வாய்பிழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகின்றனர். இப்படி ஒரு பக்கம் மக்கள் அல்லாடி கொண்டிருக்கும் அதேவேளையில், மற்றொரு கூட்டம் மதுவில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. ஊரடங்கை காரணம் காட்டி பல்வேறு தொழில் நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்ட போதும் மதுக்கடைகள் மட்டும் மூடப்படவில்லை. அப்படியே மூடப்படுவதாக அறிவித்தாலும் பெட்டி, பெட்டியாக சரக்கை வாங்க வரிசையில் சண்டை போடும் கூட்டத்தை நாம் பார்த்திருக்கிறோம்.

மேலும் படிக்க:http://கஞ்சா கிடைக்காத கடுப்பில் போதை ஆசாமி செய்த காரியம்… எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் மருத்துவருக்கு காத்திருத்த அதிர்ச்சி…!!

அதேவேளையில் மது கிடைக்காமல் சானிடைசர், சேவிங் லோஷன், வார்னிஷ், கள்ளச் சாராயம் ஆகியவற்றை குடித்து உயிர் இழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அப்படி ஆந்திர மாநிலத்தில் நடந்த அவலம் ஒன்று மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், குரிச்சேடு கிராமத்தில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கொரோனா தொற்று காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இதனால் சரக்கு கிடைக்காமல் திண்டாடிய தூய்மை பணியாளர்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் சிலர் ஆல்கஹால் கலந்திருக்கும் சானிடைசரை போதைக்காக குடித்துள்ளனர். 4 நாட்களுக்கு முன்பு அப்படி சானிடைசரை குடித்தவர்களுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க:http://ஹர்திக் பாண்டியாவிற்கு குழந்தை பிறந்தாச்சு… புகைப்படத்துடன் வெளியான அசத்தல் தகவல்…!!

அங்கு நடந்த பரிசோதனையில் சானிடைசர் குடித்ததால் அவர்களின்  குடல் மற்றும் கல்லீரல் வெந்துபோனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சானிடைசர் குடித்தவர்களில் 8 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களும் உயிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Share this:

Related posts

மாலை நேரத்தில் வந்த நல்ல செய்தி… இனி இ-பாஸ் தேவையில்லை… மத்திய அரசு அதிரடி…!!

NEWSKADAI

கொரோனா நேரத்தில் கோலாகலமாக நடக்கப்போகும் அயோத்தி பூமி பூஜை…!

NEWSKADAI

இப்படியே போனால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது… எச்சரிக்கும் வைகோ…!

NEWSKADAI

பப்ஜி உட்பட 118 ஆப்களுக்கு தடை… மத்திய அரசு அதிரடி…!!

MANIMARAN M

தவறுதலாக வெடித்த துப்பாக்கி… மார்பில் குண்டு பாய்ந்து மரணமடைந்த டிஜிபி…!!

THAVAMANI NATARAJAN

25 ஆயிரம் கோடியை ஏப்பம் விட துடிக்கும் அம்பானி பிரதர்ஸ்… சட்டையைப் பிடிக்கும் உச்சநீதிமன்றம்…

MANIMARAN M