Newskadai.com
இந்தியா

“பி.எஸ்.என்.எல். நாட்டிற்கே ஒரு களங்கம்; தேசதுரோகிகளின் கூடாரம் விரைவில் காலியாகும்”… கொளுத்தி போட்ட பாஜக எம்.பி…!

Share this:

கடந்த சில மாதங்களாக பல்வேறு அரசு நிறுவனங்கள் தனியார் மையமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பி.எஸ்.என்.எல் சேவையை தனியார் மையமாக்க வேண்டும் என்று எம்பி அனந்தகுமார்  ஹெக்டா கூறியுள்ளது மிகவும் சர்சைக்குரியதாக உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அனந்தகுமார் ஹெக்டா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் எல்லோரும் தேசத்துரோகிகள். அவர்கள் அனைவரையும் வேலையை விட்டு தூக்க வேண்டும். அந்த நிறுவனத்தை தனியாருக்கு விற்பது உறுதி என்று மிகவும் கடுமையாக பேசி சர்சையை கிளப்பியுள்ளார்.
இது குறித்து அனந்த குமார் ஹெக்டா அவர்கள் உத்தர கன்னடா மாவட்டத்தில் பாஜக கட்சி நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது
 
உத்தர கன்னடாவில் மட்டுமின்றி பெங்களூர் மற்றும் டெல்லியில் உள்ள எனது வீடுகளில் எப்போதும் பி.எஸ்.என்.எல்  நெட்வொர்க் கிடைப்பதில்லை. பாஜக அரசினால் கூட பி.எஸ்.என்.எல்  நிறுவனத்தில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்ய முடியவில்லை, மேலும் நாட்டின் களங்கமாக இந்த நிறுவனம் உள்ளது. இதனால் இந்த நிறுவனத்தை ஒரு முடிவிற்கு கொண்டுவர உள்ளதாக அவர் கூறியிருந்தார்.
மேலும் தேசத் துரோகிகளின் கூடாமாக பி.எஸ்.என்.எல் மாறிவிட்டது.  இதை பற்றி கார்வார் நகரில் நடந்த கூட்டத்திலும் கூறியுள்ளேன். அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தும் பி.எஸ்.என்.எல்  பணிபுரிபவர்கள் சரிவர வேலையை செய்வதில்லை. அரசாங்கம் உரிய நிதி ஒதுக்கியுள்ளது. பி.எஸ்.என்.எல்   நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் 85,000 ஊழியர்களையும் வேலையை விட்டு நீக்கவுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என்றும். மேலும்  பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனியார் மயமாக்கப்படுவது உறுதி எனவும் கூறி சர்சைகளுக்கு வித்திட்டுள்ளார்.

Share this:

Related posts

மறியல் செய்யும் காண்டாமிருகம் : அசாமில் நடப்பது என்ன?

NEWSKADAI

ரயில்வேயில் தனியார் : 50 சதவீதம் நிரந்தர காலி பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க ரயில்வே வாரியம் உத்தரவு.

NEWSKADAI

பெருவெள்ளத்தில் பிறந்த புது உயிர்… தத்தளித்த கர்ப்பிணிக்கு மீட்பு படகில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

NEWSKADAI

கொடுந்தீக்கு பலியான கொரோனா நோயாளிகள்… ஆந்தராவில் நடந்த பகீர் சம்பவ வீடியோ

MANIMARAN M

விவசாயத்திற்கு எதிரான வேளாண் திட்ட மசோதாக்களை நாடு ஒருபோதும் அனுமதிக்காது – ராகுல் காந்தி

MANIMARAN M

மீண்டும் உடல் நலக்குறைவு… உள்துறை அமைச்சர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி…!!

MANIMARAN M