Newskadai.com
தமிழ்நாடு

“மகனின் மருத்துவ செலவிற்கு பணமில்லை”… வறுமையிலும் நேர்மையை விட்டுக்கொடுக்காத ஆட்டோ ஓட்டுநர்…!

Share this:

திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் ரஜினிமுருகன். இவர் நடிகர் ரஜினி காந்தின் தீவிர ரசிகர். இதனாலயே தனது பெயரோடு ரஜினியின் பெயரையும் இணைத்துக் கொண்டார். சவாரி சென்ற ரஜினிமுருகன் பார்சல் ஒன்று ரோட்டில் கிடந்ததைப் பார்த்து எடுத்துள்ளார். பின்னர் அதை பிரித்து பார்த்ததில் அதில் 2 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது.

பின்னர் அந்த பார்சலில் விவரங்களை தேடியபோது அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது பணம் என்பதை அறிந்து அவரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளார். தன்னுடைய மனைவி கோகிலாவை அழைத்துக் கொண்டு சுப்ரமணியன் வீட்டிற்கு சென்று அவர் தவற விட்ட 2 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்துள்ளார். இதை எதிர்பாராத சுப்ரமணியன் தான் தவற விட்ட பணம் திரும்ப கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைந்து ரஜினிமுருகனுக்கும் அவரது மனைவிக்கும் நன்றித் தெரிவித்தார்.

தற்போது விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தனது மகனின் மருத்துவத்திற்கே செலவு செய்ய இயலாமல் வறுமையில் இருந்தும் 2 லட்சம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மை மிக்க ரஜினிமுருகனை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவமறிந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் வறுமையில் வாடினாலும் நேர்மையாக செயல்பட்ட ரஜினி முருகன் மற்றும் அவரது மனைவியை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி கெளரவித்தார்.


Share this:

Related posts

+1 மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்…

MANIMARAN M

தனித்திருப்பதை தவிர வேற வழியில்லை… கொரோனா பரவலில் அடுத்த கட்டத்தில் தமிழகம்…!!

NEWSKADAI

முனீஸ்வரருக்கு தானமாக இடமளித்த அப்துல் காதர்…..

MANIMARAN M

தமிழக மக்களே உஷார்: 15 மாவட்டங்களை பதற வைக்கப்போகும் மழை…!!

THAVAMANI NATARAJAN

ஜலகையில் கொரோனா பீதியில் முதியவர் உயிரிழப்பு… அதிர்ச்சியில் மக்கள்…!!

NEWSKADAI

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை…. உற்சாக வெள்ளத்தில் தூத்துக்குடி மக்கள்..!!

AMARA