Newskadai.com
தமிழ்நாடு

8 வயது சிறுவனை காவு வாங்கிய ‘குப்பை’… ஈரோட்டில் நடந்த பரிதாபம்..!!

Share this:

ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் இவருடைய மனைவி ஸ்ரீமா இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு10 வயதில் கிஷோர், 8 வயதில் சந்தோஷ் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த திங்களன்று வீட்டில் இருந்த குப்பைகளை கொட்டுவதற்காக கிஷோரும், சந்தோஷும் அந்த பகுதியில் உள்ள பெரும்பள்ளம் ஓடைக்கு சென்றுள்ளனர். அப்போது குப்பைகளை கொண்டு வந்த டப்பாவை கழுவ முயன்ற போது, சிறுவன் சந்தோஷ் எதிர்பாராத விதமாக ஓடையில் தவறி விழுந்துள்ளார்.

நீரில் மூழ்கிய சந்தோஷை மீட்க சிறுவனான கிஷோர் மிகவும் முயன்றுள்ளான். ஆனால் சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் நீரின் அளவு அதிகமாக இருந்துள்ளது. இதனால் சந்தோஷ் வேகமாக நீரில் மூழ்கியுள்ளான். கிஷோரின் கதறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நீரில் குதித்து, சந்தோஷை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு சந்தோஷ் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.  8 வயது சிறுவன் ஓடையில் மூழ்கி இறந்ததால் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

100க்கு மேல் கொரோனா பாதிப்பில் 11 மாவட்டங்கள்… உங்கள் ஊரில் எவ்வளவு..!?

NEWSKADAI

தமிழக மக்களே தயார்: நாளை முதல் வீடு தேடி வருகிறது அரசின் அசத்தல் டோக்கன்…!

THAVAMANI NATARAJAN

நாளையுடன் நிறைவடைகிறது பிளஸ் 1, பிளஸ் 2 மறுகூட்டல் விண்ணப்பம்…!!

THAVAMANI NATARAJAN

12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை…!

THAVAMANI NATARAJAN

கிருஷ்ணகிரி அரசியல் பிரமுகர்களை தொடர்ந்து தாக்கும் கொரோனா

THAVAMANI NATARAJAN

சூர்யாவிற்கு எதிராக நள்ளிரவில் கொதித்தெழுந்த உயர்நீதிமன்ற நீதிபதி…

MANIMARAN M