Newskadai.com
இந்தியா

வங்கியில் ரூ.20 லட்சத்தை ஆட்டையப் போட்ட 11 வயது சிறுவன்… சிசிடிவியில் பதிவான பகீர் காட்சிகள்…!

Robbery
Share this:

கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது., அது ஒன்றும் புதிய செய்தி அல்ல, என்பது போல் வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. ஆனால்   11 வயது உடைய சிறுவன் கொஞ்சம் கூட பயமில்லாமல் அசால்டாக 20 லட்சம் பணத்தை கொள்ளை அடித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் எனும் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கிக்குள் நுழைந்த சிறுவன் தான் கொண்டு வந்த பையில், ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்து எடுத்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Amount

இந்நிலையில் அன்று மாலை வங்கி  ஊழியர்கள் தங்கள் வசூலித்த பணம் சரியாக இருக்கிறதா என எண்ணியுள்ளனர். 20 லட்சம் பணம் குறைவாக இருந்ததால் பல முறை எண்ணி பார்துள்ளனர். இருப்பினும் பணம் குறைவாகவே இருந்ததால் சந்தேகித்த ஊழியர்கள் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை பரிசோதித்தனர். அப்பொழுது 11 வயது சிறுவன்  பணத்தை திருடி, அதனை தனது பையில் வைத்து வெளியேறியுள்ளான் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள சம்பவம் தொடர்பாகவும், அந்த சிறுவன் யார் எனவும் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது 380 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுவனை கைது செய்யும் பட்சத்தில் அவன் கொள்ளையடித்தது எப்படி மற்றும் அதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகும்.


Share this:

Related posts

போலோ ஜெய் ஸ்ரீராம்.. போலோ மோடிஜி ஜிந்தாபாத்… அரங்கேறிய விபரீதம்…

MANIMARAN M

கொரோனா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… 8 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்…!!

MANIMARAN M

சல்யூட்: உலகின் சிறந்த சிந்தனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!!

MANIMARAN M

மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசு… கொரோனாவை கண்டுகொள்ளாமல் தொடங்கியது JEE தேர்வு…!!

THAVAMANI NATARAJAN

பச்சிளம் குழந்தையைப் போல் மூதாட்டியை கையில் ஏந்திச் சென்று காத்த காவலர்… குவியும் பாராட்டுக்கள்…!

THAVAMANI NATARAJAN

வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு… போராட்டக்காரர்களை கொலைவெறியுடன் தாக்கிய பாஜக தொண்டர்கள்…!

MANIMARAN M