Newskadai.com
தமிழ்நாடு

அடுத்த லெபனானாய் மாறப்போகும் சென்னை… அரசுக்கு அபாய எச்சரிக்கை கொடுத்த ராமதாஸ்…!!

Share this:

நேற்று முன்தினம் லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் அந்நகரமே உருக்குலைந்து காணப்படுகின்றது. இந்த கோர விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளார்.

இந்த வெடி விபத்தினால் பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த கோர விபத்தினால் நகரம் 40 வருடம் பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் பல வருடங்களாக கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டதாலயே இவ்வளவு பெரிய கோரச் சம்பவம் நடந்தேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. பல வருடங்கள் ஒரே இடத்தில் இருந்ததால் அதிக அளவு வெப்பம் ஏற்பட்டு வெடித்து சிதறியிருக்கக் கூடும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் பலரை கைது செய்து லெபனான் அரசு விசாரணை நடத்தி வருகின்றது.

மேலும் படிக்க:http://EXCLUSIVE: லெபனானில் வெடித்து சிதறியது கிடங்கு… வெளியானது பயங்கர சத்தத்திற்கான காரணம்…!!

உலகம் முழுவதும் அமோனியம் நைட்ரேட் விவசாயம் மற்றும் வெடி பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் உரமாகவும், பாறைகளை உடைக்கவும், கிணறுகள் தோண்டவும் தேவைப்படும் வெடிபொருட்கள் தயாரிக்கவும் இந்த அமோனியம் நைட்ரேட் உபயோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்காக இறக்குமதி செய்யப்பட்ட 740 டன் அளவுள்ள அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டு வட சென்னையில் உள்ள ஒரு கிடங்கில் 6 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

லெபனான் நாட்டில் ஏற்பட்ட கோர விபத்து போல சென்னையிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக சென்னையில் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த கடும் கோரிக்கை எழுந்துள்ளது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், மற்றும் வெடிமருந்துகள் பாதுகாப்பு அதிகாரிகளும் கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்த ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்!” என்று பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

அம்மாடியோவ்… இருமடங்காக அதிகரிக்கப்பட்டது மேட்டூர் அணை நீர் திறப்பு…!!

THAVAMANI NATARAJAN

நீட்டினால் இன்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை… திருச்செங்கோடு மாணவனின் பரிதாப முடிவு…!!

AMARA

7 பேர் கொண்ட குழு நியமணம் : புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு அதிரடி…

MANIMARAN M

தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 14-ஆவது இடம். மத்திய அரசின் சதியா ?அமைச்சர் பரபரப்பு தகவல்…

MANIMARAN M

நீதிமன்றம் விட்டாலும் நாங்க விடமாட்டோம்… சூர்யாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த இந்து இளைஞர் முன்னணி…!!

MANIMARAN M

ஈ-பாஸால் எல்லாம் நாசமா போச்சு: குமுறும் விவசாயிகள், சிறு தொழில் முனைவோர்…

MANIMARAN M