Newskadai.com
அரசியல்

கவலைக்கிடமான நிலையில் வெற்றிவேல்…. கைவிரித்த மருத்துவர்கள்… சோகத்தில் மூழ்கிய தினகரன்…!

vetrivel
Share this:

தமிழகத்தில் தீயாய் பரவும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொடூர கொரோனாவால் அரசியல் கட்சி பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவது அரசியல் கட்சியினரை சற்றே பீதியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது டி.டி.வி. தினகரனின் அமமுக கட்சி பொருளாளர் வெற்றிவேலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

vetrivel

முதற்கட்டமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த வெற்றிவேலுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 6ம் தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையிலும், நேற்று முதல் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளதாக மருத்துவமனை வட்டாராங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

vetrivel
 

 

மேலும் படிக்க:  http://வயதானவர்களை தேடி வலைவிரிக்கும் கொரோனா… எச்சரிக்கை ரிப்போர்ட்..!!

வெற்றிவேலுக்கு நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் இருப்பதாலும், ஏற்கனவே அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாலும் உடல் நிலை மேசமாக இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவக்குழுவினரின் கண்காணிப்பில் வெற்றிவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவருடைய உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் டிடிவி தினகரன் மற்றும் அமமுக தொண்டர்கள் கடும் சோகத்தில் ஆழ்த்துள்ளனர்.


Share this:

Related posts

“அக்கா எனும் அம்மாவை கொரோனாவிடம் இருந்து காக்க தவறிவிட்டேன்”… திருமாவளவன் உருக்கம்…!!

AMARA

“எங்க கோவணத்தையும் உருவிடாதீங்க”… நாமம் போட்டு விவசாயிகள் போராட்டம்..!!

MANIMARAN M

திமுகவின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறியே தீருவர்… மு.க.ஸ்டாலினை தெறிக்கவிட்ட மு.க.அழகிரி…

MANIMARAN M

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?…. மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை…!!

NEWSKADAI

தமிழகத்தை வஞ்சிக்கும் ரிசர்வ் வங்கியின் நியாயமற்ற கடன் கொள்கைக்கு முதல்வர் எதிர்ப்பு… பிரதமருக்கு கடிதம்…!!

MANIMARAN M

“திமுக தேர்தல் அறிக்கை வெறும் ஜீரோ”… ஸ்டாலினை சீண்டும் எல்.முருகன்…!

MANIMARAN M