Newskadai.com
அரசியல்

#BREAKING கொரோனாவால் அமமுக பொருளாளர் வெற்றிவேல் மரணம்…. தீராத சோகத்தில் டிடிவி தினகரன்….!

Share this:

தமிழகத்தை படாய் படுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வந்தனர். அதற்கு அடுத்தபடியாக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கன்னியாகுமரி தொகுதியான எம்.பி.யான எச்.வசந்தகுமார் கொரோனாவிலிருந்து மீண்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் உடல் நலக்குறைவால் காலமானார்.

vetrivel

இதனிடையே அமமுக கட்சியின் பொருளாளரும், டிடிவி தினகரனின் முக்கிய தளபதியுமான வெற்றிவேலுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. முதற்கட்டமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த வெற்றிவேலுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 6ம் தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையிலும், நேற்று முதல் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளதாக மருத்துவமனை வட்டாராங்களில் இருந்து தகவல் வெளியாகின.

vetrivel

வெற்றிவேலுக்கு நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் இருப்பதாலும், ஏற்கனவே அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாலும் உடல் நிலை மேசமாக இருப்பதாக கூறப்பட்டது. மருத்துவக்குழுவினரின் கண்காணிப்பில் வெற்றிவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் மருத்துவமனையில் காலமானார். இந்த செய்தி அமமுக தொண்டர்களையும், அக்கட்சியின் தலைவரான டிடிவி தினகரனையும் கடுஞ் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Share this:

Related posts

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.3 ஆயிரம் கோடி உடனடியாக தேவை… பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்…!

AMARA

#BREAKING விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிறார் விஜயகாந்த்… உற்சாகத்தில் துள்ளிகுதிக்கும் தேமுதிக தொண்டர்கள்…!

AMARA

கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்குகிறது சட்டமன்ற கூட்டத் தொடர்…

MANIMARAN M

3 1/2 மணி நேரத்தில் 7 மசோதாக்களை நிறைவேற்றி சாதனை படைத்த பாஜக அரசு

MANIMARAN M

எம்.பி.கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி… வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்…!!

AMARA

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M