Newskadai.com
அரசியல்

விவசாயத் திட்டத்தை அடுத்து பிரதமர் வீடு கட்டும் திட்டத்திலும் மோசடி…

Share this:

கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் பிரதமரின் விவசாயி நிதியுதவி திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளது விவசாயிகள் மட்டுமல்லாமல் பொது மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முறைகேடுகள் செய்து இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களின் வங்கி கணக்குகள் முடக்கபட்டு பல கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.

PM Kissan

இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட அரசு உயர் அதிகாரிகள் உட்பட 80 பேருக்கு மேலானோர் பணி நீக்கம் செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிடிவி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, பிரதமரின் வேளாண்மை நிதி உதவி திட்டத்தைப் போல பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் (Pradhan Mantri Awas Yojana) தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அடுத்தடுத்து செய்திகளாக வெளிவருகின்றன. உயிரோடு இருப்பவர்களின் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் வீடு கட்டிக் கொடுத்ததாக பணம் கையாடல் செய்ததாக மட்டுமின்றி, இறந்தவர்களின் பெயராலும் இந்த மோசடி நிகழ்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

 

ஏழை, எளிய மக்களின் நலனுக்கான இத்தகைய திட்டங்களில் மனசாட்சியின்றி செய்யப்பட்டுள்ள முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்துவதையும், அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தாமதமின்றி உறுதி செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

ராஜஸ்தானில் பிஜேபி ஆட்சி ??? கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் சச்சின்…

MANIMARAN M

“நீங்க எல்லாம் பாஜகவுடன் தொடர்பு வச்சிருக்கீங்க”… காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் சீண்டிய ராகுல் காந்தி…!!

AMARA

நீட் தேர்வு விவகாரம்: பேரவையில் முதல்வர் – ஸ்டாலின் இடையே காரசார விவாதம்…!

AMARA

“அக்கா எனும் அம்மாவை கொரோனாவிடம் இருந்து காக்க தவறிவிட்டேன்”… திருமாவளவன் உருக்கம்…!!

AMARA

பிரதமரிடம் மனு போட்ட முதல்வர்.. நாம எப்பவுமே நிறைய தான் கேட்போம்… ஆனா அவங்க கொடுக்கனும்ல…

MANIMARAN M

கொரோனாவை வென்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்… 80 வயதிலும் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி…!!

AMARA