கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்திருந்தது. கொரோனாவில் இருந்து குணமடைந்து வீட்டு தனிமையில் இருந்து மீண்டு வந்த நிலையில் மூன்று நாட்களாக உடல் சோர்வு மற்றும் வலி காரணமாக மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து எய்ம்ஸ் ஊடக மற்றும் நெறிமுறை பிரிவு தலைவர் டாக்டர் ஆர்த்தி விஜ் அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மூன்று நான்கு நாட்களாக உடல் சோர்வு மற்றும் உடல் வலிகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். சென்ற வாரம் அவருக்கு செய்யப்பட்ட கோவிட் -19 பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது. தற்பொழுது அவர் நன்றாக இருக்கிறார். மருத்துவமனையில் இருந்து தனது பணியைத் தொடர்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.