Newskadai.com
உலகம்

அமெரிக்க அதிபரின் மிரட்டலுக்கு பயந்த டிக் டாக் நிறுவனம்…!!!

Share this:

“டிக் – டாக்” உள்ளிட்ட சீன செயலிகளை இந்தியா தடை செய்தது போல அமெரிக்காவும் தடை செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் “டிக்-டாக்” செயலி தொடர்ந்து செயல்படும் என அதிரடி அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்ய நிறைவேற்றப்பட்ட ஆணையில் கையெழுத்திடுவதாக அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்திருந்தார். மேலும், டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் விற்காவிட்டால், அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அதிரடி காட்டினார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், டிக்டாக் செயல்பாட்டை நிர்வகிக்க அமெரிக்க நிறுவனங்களான ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனம் இணைந்து புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்த டிரம்ப், இனி டிக்டாக் நிறுவனம், அமெரிக்க கட்டுப்பாட்டில் இயங்குமெனவும், பயனர்களின் தகவல் பாதுகாப்பாக இருக்குமெனவும் டிக்டாக் செயலி செயல்பட தனது அரசு அனுமதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

“இந்த கொரோனா தடுப்பூசி போட்டால் குரங்காக மாறிடுவீங்க”… பீதி கிளப்பும் ரஷ்யா…!

THAVAMANI NATARAJAN

மோடி கூட சேர்ந்து இதை செஞ்சது மட்டும் தான் டிரம்பின் சாதனை… வறுத்தெடுக்கும் ஜோ பிடன்…!

NEWSKADAI

எகிறும் எதிர்பார்ப்பு… ஐ.நா பொதுக்கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரை…!!

MANIMARAN M

7 மாதங்களுக்கு பிறகு மக்காவில் தொழுகைக்கு அனுமதி… சவுதி அரசின் அதிரடி முடிவு…!

MANIMARAN M

மக்களே உஷார்: கொரோனாவின் ஆட்டம் இனி கொடூரமாக இருக்கும்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!

NEWSKADAI

காங்கோ தங்க சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு… குழந்தைகள் உட்பட50 பேர் பலி…!!

AMARA