Newskadai.com
தமிழ்நாடு

உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை…தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரின் தன்னலமற்ற செயல்…

Private Ambulance Free service for child
Share this:

கோவை மாவட்டம் அன்னூர் அருகில் உள்ள கருவலூர் கிராமத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையை தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் கட்டணமின்றி அரசு மருத்துவமனையில்  அனுமதித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த ஷாஜகான்- மாமுனி என்ற தம்பதிகள் கருவலூர் கிராமத்தில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் குழந்தையின் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறாமல் குழந்தையின் வயிற்றுபகுதி வீக்கமடைந்து சுவாசிப்பதற்கு சிரமப்பட்டுள்ளது. அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையின் உடல் மிகவும் மோசமான நிலையை அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Private Ambulance Free service for child

மேலும் படிக்க : #BREAKING காலையில் காங்கிரஸில் இருந்து விலகல்…. பிற்பகலில் பாஜகவில் இணைவு… குஷ்பு அதிரடி…!

108 ஆம்புலன்ஸ் வர கால தாமதமானதால் வடமாநில பெற்றோர்கள் பரிதவித்த நிலையில் இதனை கவனித்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர், தான் அரசு மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்துச் செல்கிறேன் வாருங்கள் என்று நேற்று முன்தினம் மதியம் 12.45 மணிக்கு கிளம்பிய ஆம்புலன்ஸ் 1.12 மணிக்கு சுமார் 30 கி.மீ தொலைவை கடந்து குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதனை தொடர்ந்து அந்த பச்சிளம் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை காப்பாற்ற தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சிரஞ்சீவி செய்த தன்னலமற்ற செய்கையை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.


Share this:

Related posts

15 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை… தலைமறைவான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வலைவீச்சு…!!

NEWSKADAI

ஹிந்தி தெரியாதா..? லோன் கிடையாது… தமிழகத்தில் டாக்டருக்கு நேர்ந்த அவலம்…

MANIMARAN M

அடுத்த ரவுண்டுக்கு தயாரான கொரோனா… தொற்றால் முடங்கும் ஜலகை சுற்றுவட்டாரம்…!!

MANIMARAN M

மக்கள் உயிர் மீது இவ்வளவு அலட்சியமா?… சேலம் கொரோனா பணியாளர்கள் மீது பாய்ந்தது நடவடிக்கை…!

THAVAMANI NATARAJAN

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு ஹால்டிக்கெட் தயார்… நாளை மறுதினம் பதிவிறக்கம் செய்யலாம்…!!

THAVAMANI NATARAJAN

ஒரே நாளில் எவ்வளவு பேர் பாதிப்பு மற்றும் பலி…?! கொரோனா மாவட்ட நிலை..

NEWSKADAI