Newskadai.com
சினிமா

சூர்யாவிற்கு துணை நிற்கும் அஜித், தனுஷ், ஜெயம் ரவி… போஸ்டர் ஓட்டி தெறிக்கவிடும் ரசிகர்கள்…!!

Suriya
Share this:

மாணவர்களின் மன உளைச்சலை புரிந்து கொள்ளாமல் இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வால் தமிழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். நீட் தேர்வில் நம்மால் வெற்றி பெற முடியுமா? என்ற அச்சமே அவர்களுடைய மரணத்திற்கான காரணம். மாணவர்களின் தற்கொலை ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் நடிகர் சூர்யா நீட் தேர்வை எதிர்த்தும், மாணவர்களின் தற்கொலையை கண்டித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். கடந்த இரண்டு நாட்களாக சூர்யா அறிக்கை மட்டுமே சோசியல் மீடியாவிலும், அரசியல் கட்சி தலைவர்களிடமும் பேசுபொருளாக மாறியுள்ளது. சூர்யாவிற்கு பாஜக தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பிய போதும், அவருடைய ரசிகர்கள் அவருக்காக களத்தில் இறங்கினார். தங்களுடைய ஆதரவை தெரிவிக்கும் விதமாக #TNStandWithSuriya என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் செய்தனர்.

Surya

இருப்பினும் சூர்யாவிற்கு எதிரான எதிர்ப்பலைகள் குறைந்ததாக தெரியவில்லை. நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக கூறி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வருகிறது. சூர்யா மீது நடவடிக்கை எடுக்கும் படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், அவருக்கு ஆதரவாகம், நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பிரபாகரன் மற்றும் முன்னாள் நீதிபதிகள் 6 பேர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர்.

Surya

இதனிடையே சூர்யாவிற்கு ஆதரவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சங்கங்களும் தனது ஆதரவை தெரிவித்து வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டையில் உள்ள அஜித், தனுஷ், ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ரசிகர்கள் மன்றம் சார்பில் #TNStandWithSuriya என்ற ஹேஷ்டேக்குடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை கூட்டியுள்ளது. அந்த போஸ்டர் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


Share this:

Related posts

விஷால் படத்திற்கு ஆப்பு… ஓடிடி ரிலீசுக்கு தடை போட்ட உயர் நீதிமன்றம்…!!

THAVAMANI NATARAJAN

சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு…!!

AMARA

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி… சதா நாடார் மீது வழக்குப்பதிவு…!!

AMARA

உலக நாயகனை அசிங்கப்படுத்திய லோகேஷ் கனகராஜ்… விஜய்க்கு அடுத்து கமலையும் கவிழ்த்துவிட்ட சம்பவம்…!!

AMARA

“இதை செய்தால் எஸ்.பி.பி. நிச்சயம் மீண்டு வருவார்”… நம்பிக்கை கொடுத்த சிம்புவின் உருக்கமான கோரிக்கை…!!

AMARA

“நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் உயிரை பறிக்கிறது”.. சூர்யா கடும் கண்டனம்…!!

AMARA