Newskadai.com
சினிமா

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்ட ஐஸ்வர்யா ராய்… மகள் ஆராத்யாவும் நலம்…!!

Share this:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 11ம் தேதி தெரிவித்திருந்தார். இதையடுத்து அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சன், மனைவி ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவிற்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அமிதாப், அபிஷேக் உடலில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

மேலும் படிக்க: http://“அதுக்கு மட்டும் நோ”… கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளரை விரட்டி விட்ட சாய் பல்லவி…!!

இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா ராயும், மகள் ஆராத்யாவும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய், அமிதாப் மற்றும் அபிஷேக் அனுமதிக்கப்பட்டுள்ள அதே நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க: http://சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யா ராயும், மகள் ஆராத்யாவும் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அபிஷேக் பச்சன், உங்களுடைய தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கு நன்றி. ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டீவ் என வந்ததை அடுத்து இருவரும் வீடு திரும்பியுள்ளனர். நானும், எனது தந்தையும் மட்டுமே மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளோம் என தெரிவித்துள்ளார். இதனால் ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


Share this:

Related posts

வேடந்தாங்கல் விவசாயியாக மாறிய இயக்குநர் வெற்றிமாறன்… பிறந்த நாள் ஸ்பெஷல் தகவல் இதோ…!

NEWSKADAI

இந்தியன் 2 கிரேன் விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு கமல், ஷங்கர் கொடுத்த ரூ.4 கோடி நிதி உதவி…!!

AMARA

அந்த விஷயத்தில் தம்பியை மிஞ்சுவாரா செல்வராகவன்?… தனுஷ் பட ஹீரோயினுடன் வெளியான அசத்தல் போஸ்டர்…!!

MANIMARAN M

எஸ்.பி.பி-யின் தற்போதைய உடல் நிலை என்ன?… மகன் எஸ்.பி.பி. சரண் வெளியிட்ட வீடியோ…!

AMARA

லாக்டவுனில் இப்படி ஒரு காரியம் செய்தாரா தல அஜித்?… தாறுமாறு வைரலாகும் போட்டோவால் குஷியான ரசிகர்கள்…!!

NEWSKADAI

“பிரார்த்தனையின் சக்தியே தனி”… எஸ்.பி.பி.க்காக பிரார்த்திப்போம் வாருங்கள்… விவேக்கின் உருக்கமான வேண்டுகோள்…!!

AMARA