கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தியில் சிக்கியது. துபாயில் இருந்து கோழிக்கோட்டிற்கு வந்த விமானம், விமான நிலையத்தில் தடை இறங்கும் போது சறுக்கியதில் விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. மொத்தம் 191 பயணிகளுடன் தரையிறங்க முற்பட்ட போது விபத்தில் சிக்கியதால் விமானம் இரண்டாக உடைந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அனைத்து பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்து வர சென்ற விமானம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓடுதளத்தை நோக்கி வந்து கொண்டிருந்த விமானம் 35 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
விபத்தில் ஒரு விமானி மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும், பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் விபத்தில் 3 பேர் வரை உயயிரிழந்திருக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.